பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 225 'அயல் இனிதிருத்தி கின்அரசும் ஆணையும் இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே புயல்பொரு தடக்கை புரக்கும் பல்லுயிர் வெயில் இலதே குடையென வினவினான்’ (128) அயல் இனிது இருத்தி - என் பக்கத்தில் இன் பொடு அமர்க. இயல்பினின்' என்பது, ஒரு தொல்லையும் இடை யில் ஏற்படாமல் எல்லாம் இயற்கையாக-இயல்பாக நடை பெறுகின்றனவா என்னும் குறிப்பை அறிவிக்கிறது. தட கை =நீண்ட கை. புயல் பொரு கை = முகில்போன்ற கை. கை கொடுத்துக்கொடுத்து நீண்டு விட்டதால் தடக்கை எனப் பட்டதோ. இயற்கையான நலம் உசாவுதலாகும் இது. பரதன் நீ சுக்கிரீவன், ஐயனே! நின் அருள் உள்ளபோது எனக்குக் குறை ஏது? அரசு நன்கு நடைபெறுகிறது. யான் காலம் தாழ்த்திய குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் எனப் பணிய, அவனுக்கு இராமன் கூறுவான்: - சுக்கிரீவ! நீ வருவதற்குக் குறித்த காலம் கடப்பினும் நின் படைஞர்கள் எல்லாப் பக்கங்களிலும் சென்று தேடும் முயற்சியில் ஈடுபட்டு, சிதறிக் கிடந்த படைகளையும் ஒன்று திரட்டினராதலின், காலம் தாழ்த்ததாகக் கொள்ள இனி இடமில்லை; என் தம்பி பரதனைப்போன்ற நீ, இவ்வாறு உன்னையே இழித்துப் பேசிக்கொள்ளக் கூடாது. என்று ஆறுதல் கூறினான். • . "திருவுறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து ஒருவரும் காலம்உன் உரிமையோர் உரை தருவினைத்து ஆகையின் தாழ்விற் றாகுமோ பரதன் இனையன பகர்தியோ என்றான் (133) திரு உறை மார்பன்-திருமகள் உறையும் மார்புடைய திருமாலாகிய இராமன், தீர்ந்ததேயும் என்பதில் உள்ள