பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 19 குரண்டம் = கொக்கு. ஒற்றைக்காலில் நின்று ஏமாற்றும் கொக்குகளின் வஞ்சகம் மீன்கட்குத் தெரியும். தம் வருகைக்காகக் கொக்குகள் வாடியிருக்கும் வஞ்சகமும் மீன்கட்குத் தெரியும். வஞ்சிக்கும் கொக்குகள் வஞ்சி மரத்தில் அமர்ந்திருந்தும், மிரண்டவன் கண்ணுக்கு இருண்டன வெல்லாம் பேய்” என்றாற்போல் மீன்கள் அஞ்சின. 'அலமர' என்பதற்குப் பதில் 'அலம்வர என்ற பாடமும் உண்டு; இது பதிப்பு வேறுபாடு. கூலம் = கரை. சக்கர வாளங்கள் பொய்கையின் ஒரு பக்கம் நீலமணியின் ஒளி படர்ந் திருப்பதால் அப்பகுதி இரவு போலவும், மற்றொரு பக்கம் பதுமராகம் என்னும் செம்மணி படர்ந்திருப்பதால் அப்பகுதி - செஞ்ஞாயிறு விளங்கும் பகல் போலவும் காட்சியளித்தன. அப்பொய்கைக் கரையில் ஆண் - பெண் சக்கர வாளப் பறவைகள் தங்கியிருந்தன. பாடல்: "அங்கோர் பாகத்தில் அஞ்சன மணிநிழல் அடையப் பங்கு பெற்றதில் பதும ராகத்து ஒளி பாயக் கங்குலும் பகலுமெனப் பொலிவு எய்து கரைய மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம்' (20) அஞ்சன மணி = நீலமணி. வாளம் = சக்கர வாளப் பறவை. பெண்களின் முலைக்குச் சக்கர வாளத்தை ஒப்புமையாகக் கூறுவதுண்டு. இங்கே கம்பர், சக்கரவாளப் பறவைக்கு முலையை உவமையாகக் கூறி ஒரு புதுமை படைத்துள்ளார். சக்கரவாளப் பறவைகள் பகலில் புணர்ந்து இரவில் இரைதேடும். இங்கே பொய்கையின் ஒரு பகுதி இரவாயிருப்பதால் புணரத் தயங்குகின்றன. மற்றொரு பக்கம் பகலாயிருப்பதால் இரைதேடப் புறப் படுவதற்குத் தயங்குகின்றன. இப்பறவைகவின் இயல்புக்கு ஏற்பப் பகல் இரவுத் தோற்றம் அமைத்துப் பாடியுள்ள