பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'ஏயும்' என்பது ஆயினும் என்னும் பொருளில் உள்ள இடைச்சொல்லாகும். பரதன் கள்ளம் கபடு இன்றி நடந்து கொண்டவன். சுக்கிரீவனும் இப்போது கள்ளம் கபடு இல்லாதவனாகக் காணப்படுகின்றான். ஆதலின் பரதன் நீ என்றான். மற்றும் சுக்கிரீவன் ஆறாவது உடன் பிறப் பாகக் கொன்ளப்பட்டிருப்பதும் ஈண்டு இணைத்து எண்ணத் தக்கது. இராமன் சீதையுடன் தங்கல் இன்று அல்லது நாளை பெரும்படை வரும் என்று கூறிய சுக்கிரீவனை, நீ நின் இருப்பிடம் சென்று நாளை வருக என்று அனுப்பி விட்டு, இராமன் இலக்குவனுடனும் உள்ளத்தில் சீதையுடனும் அங்கே தங்கியிருந்தான். "செங்கணான் தம்பியும் தானும் சிந்தையின் மங்கையும் அவ்வழி அன்று வைகினான்’ (138) செங்கணான் =இராமன். மங்கை 2 சீதை. இராமனது உள்ளத்தில் எப்போதும் சீதை இருப்பதால் சிந்தையின் மங்கையும் எனப்பட்டது, நெஞ்சத்தார் காதலவராக என்பது திருக்குறள். இங்கே, நெஞ்சத்தாள் காதல் அவளாக என்பதாகக் கொள்ளலாம் போலும். வாலியின் நெஞ்சில் தாரையும் மன்மதன் நெஞ்சில் இரதியும் இருப்பதாக்க் கூறப்படினும் வாலியும் மன்மதனும் . இறந்து விட்டனர். ஆனால், சீதையை நெஞ்சில் கொண்ட இராமன் இறக்கவில்லை.