பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இராமன் மகிழ்ச்சி சுக்கிரீவன் படையைக் காணுமாறு இராமனை வேண்ட, அவன் அகமும் முகமும் மலர்ந்தான். சீதையைக் கண்டது போன்ற உவகை கொண்டான். "ஐயனும் உவந்து அகமென முகம்மலர்ந் தருளித் தையலாள் வரக் கண்டன னாமெனத் தளிர்ப்பான்” (28) முகம் மட்டும் போலியாக மலர்ந்தால் போதாது - அகமும் மலர்ந்தாலே உண்மையான மலர்ச்சியாகும். பெரிய இப்படையைக் கொண்டு இராவணனை வென்று சீதையை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையால், படையின் வருகையைச் சீதையே வந்துள்ளான்'என எண்ணியதுபோல் மகிழ்ந்தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆதலின், அகமென முகம் மலர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இராமன் படை காணல் க்க்கிரீவ்னின் வேண்டுகோளின்படி, இலக்குவனுடன் படிையின் பெருக்கத்தைக் கண்ட இராமன் இலக்குவனை நோக்கிக் கூறுகிறான்: இலக்குவனே! இந்தப் படையின் உடலைத்தான் நாம் கண்டோமே தவிர இன்னும் முழுமையும் காணவில்லை. உலகில் கடலைக் கண்டிருக் கிறோம் என்று சொல்லும் மக்களுள் யாரும் கடலை முற்றிலும் கண்டிலர் “அடல்கொண் டோங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் உடல் கண்டோம் இனி முடியுறக் காணுமா றுளதோ மடல் கொண் டோங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவுறக் கண்டார்?' (34)