பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 229 உடல் காணல் என்பது, நீண்டுள்ள படையின் நடுப் பகுதி வரையுமே காண முடிந்தது - படையின் முடிவைக் காண முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. மடல் கொண்டோங்கிய அலங்கலான் = மலர்மாலை அணிந்த இலக்குவன். தாம் முடியக் காண முடியாமைக்கு இராமன் ஒர் உவமை கூறுகிறான். மக்கள் பலர் நாங்கள் கடலைக் கண்டிருக்கிறோம் என்று சொல்லுவர் - ஆனால் அவர்கள் கடலின் பரப்பு, ஆழம், கடலில் உள்ள பொருள்கள் ஆகிய வற்றைக் கண்டிருக்க முடியாது - என்பதுதான் அந்த 2) GYJ Gð) LO . கடலைப் புதிதாய்ப் பார்ப்பவர்கள் சிலரும் கடலைப் பற்றிச் சரியாக அறியாதவரா யுள்ளனர். ஒருநாள் மாலை பாவேந்தர் பாரதிதாசனும் இதற்குமுன் கடலைப் பார்த்தறியாத சேலம் மாவட்டத் தமிழன்பர் ஒருவரும் யானும் புதுச்சேரிக் கடல்கரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது சேலத்துக்காரர், உழவுத் தொழிலுக்குத் தண்ணிர் போதவில்லை என்கிறார்களே - இதோ கடலில் இவ்வளவு நீர் இருக்கிறதே - இதைப் பாய்ச்சினால் என்ன - என்று கேட்டார். உடனே பாவேந்தர் வெடிச்சிரிப்பு சிரித்துவிட்டு, என்னை நோக்கி, இதற்குமுன் இவர் ஊர்க்காரர் ஒருவர் இங்கே வந்தபோது, இவ்வளவு தண்ணிர் இருக்கும்போது துணி துவைப்பதற்கு ஒரு கல்லும் ஏன் போட்டிருக்கவில்லை - என்று கேட்டார் எனக் கூறினார். கடல்நீர் உப்புநீர் என்னும் கடலின் தன்மையைக் கூட அறியாதவர்கள் உள்ளபோது, கடலை முற்றும் அறிந்தவர் யார் இருக்க முடியும்? எண்ணவல்லார் யார்? மேலும் கூறுகிறான். கடவுளிள் திருமேனியையும், பத்துத் திசைகளையும், ஐந்து பூதங்களையும், அறிவையும்,