பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பேசும் பேச்சையும், சமயங்களின் பிணக்கையும், இந்தப் படையின் அளவையும் முற்றும் அறிந்து முடிவெடுக்க வல்லவர் யார்? - ஒருவரும் இலர்; - "ஈசன் மேனியை ஈரைந்து திசைகளை ஈண்டுஇவ் ஆசில் சேனையை ஐம்பெரும் பூதத்தை அறிவைப் பேசும் பேச்சினைச் சமயங்கள் பிணக்குறும் பிணக்கை வாச மாலையாய் யாவரே முடிவெண்ண வல்லார்?' (35) கடவுளின் மேனியை முற்றும் அறிய முடியாது; ஏனெனில் அவர் எங்கும் பரந்துள்ளார். திகம்பரர் என்னும் ஒரு பெயர் கடவுளுக்கு உண்டு. திக் அம்பரர் = திகம்பரர். திக் = திக்கு; அம்பரம்=உடை, திக்குகளையே உடையாக உடையவர் கடவுள் என்றால், அவர் நீக்கமற எங்கும் பரந்துள்ளார் என்பது பொருள். பத்துத் திசைகள், கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, இவற்றின் மேல் பகுதி, இவற்றின் கீழ்ப் பகுதி ஆகியவையாம். இவற்றை அளவிட முடியாது. வான ஊர்தி (விமானம்) குறிப்பிட்ட தொலைவே போக முடியுமன்றோ? விண், காற்று, தீ, நீர், மண் இவற்றின் இயல்பினையும் ஆற்றலையும் யாராலும் முற்றும் கண்டுணர முடியாது. அறிவுக்கும் எல்லையில்லை. நூற்றாண்டுக்கு நூற்றாண்டு - ஆண்டுக்கு ஆண்டு - மக்களின் பட்டறிவும் (அனுபவமும்) நூல் அறிவும், அறிவின் துண்ைய்ால் புதிய கண்டுபிடிப்பு களும் பெருகுவதைக் காணலாம். அறிவு இன்னும் எவ்வளவோ கண்டுபிடிக்க உள்ளது. பேசும் பேச்சு காற்றில் கலந்து உலகம் முழுவதும் பரவுகிறது. இதுவரையும் பேசப் பட்டுள்ள பேச்சுகளுக்கு அளவேயில்லை. பேச்சு எங்கும் பரவக் கூடியது என்பதை இக்காலத்தார் வானொலி வாயிலாக அறிவர். பல சமயத்தார்களும் தம்முள்