பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 23 கடுமையாக வாதிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டிக்க எண்ணிய கம்பர், இவர்களின் வாதங்களையும் அளவிட முடியாது என்றார். ஆறு கோடி மாயா சத்திகள்’ என்பது திருவாசகம். இவ்வாறே வானரர் படைகளையும் அளவிட முடியாதாம். இலக்குவன் கூற்று இந்த வானரப் படையால் இவ்வுலகில் செய்ய முடியாத செயல் ஒன்றுமில்லை. தேவியைக் கண்டுபிடிப்பதென்பது இவர்கட்கு மிகவும் எளிய - சிறிய வேலையாகும். இந்தப் படையால் பாவம் தோற்றது . அறம் வென்றது - என்று இலக்குவன் கூறினான். 'யாவது எவ்வுலகத்தினில் ஈங்கு இவர்க்கியலா தாவ தாகுவது அரியதொன்று உளதெனலாமோ தேவ தேவியைத் தேடுவதென்பது சிறிதால் பாவம் தோற்றது தருமமேவென்றது இப்படையால்' (37) தேவ தேவி = சீதை. சீதையைத் தேடுவது இப் படைக்கு எளிது என்பது போருத்தம். இப்படை வீரருள் ஒருவனாகிய அனுமன் தான் ஒருவன் மட்டுமே சென்று சீதையைத் தேடிக் கண்டு பிடித்தான் அல்லவா? அதனை முன்கூட்டியே இலக்குவன் வாயிலாகக் கம்புரின் எழுத்தாணி தெரிவித்துள்ளது. இந்தப் படையின் துணை கொண்டு அரக்கரை வென்றுவிடலா மாதலின், இனிப் பாவச் செயலுக்கு இடமில்லை அறச்செயல்களே நிகழும் என்று கூறினான். உறையிடல் நான்முகன் படைத்த உலகத்து உயிர்கள் எல்லாம், இந்த வானரப் படைஞர்க்கு உறையிட்டு எண்ணுவதற்காகப் படைக்கப்பட்டன போலும்.