பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'தரங்க நீரெழுந் தாமரை நான்முகன் தந்த வரங்கொள் பேருலகத் தினின் மற்றை மன்னுயிர்கள் உரங்கொள் மால்வரை உயிர்படைத் தெழுந்தன. ஒக்கும் குரங்கின் மாப்படைக்கு உறையிடப் படைத்தன கொல்லாம்!” (38) ஒவ்வொரு குரங்கும் ஒரு பெரியமலை உயிர்பெற்று எழுந்தது போன்ற பெரிய தோற்றத்துடன் உள்ளதாம். உறையிடல் என்பது ஒர் அரிய சொல்லாட்சி. பேரெல்லையை அளக்கப் பயன்படுத்தும் ஒர் அடையாளக் குறிக்கு உறை என்பது பெயராகும். நூறாயிரம் பொருள் களை எண்ணிக்கணக்கிடுபவர், ஆயிரம் ஆயிரமாக எண்ணி ஒவ்வோர் ஆயிரத்தையும் தனியாக வைப்பர். முதல் ஆயிரம் எண்ணியதும் ஒன்று என ஒரு கோடு போடுவர்; இரண்டாவது ஆயிரம் எண்ணியதும் இரண்டு கோடுகள் போடுவர்; இப்படியே மற்ற ஆயிரங்கட்கும் கூடுதலாகக் கோடுகள் போடுவர். நூறு கோடுகள் போடமுடியாதாதலின் 100 என்னும் எண்ணைப் போடுவர். இந்தச் சிறு குறியீடு களைக் கொண்டு எத்தனையாவது ஆயிரம் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறு குறியிடுவதற்குத்தான் உறையிடல்' என்பது பெயர். (இதுபற்றி எனது சுந்தர காண்டச் சுரங்கம் என்னும் நூலின் 52, 53, 54-ஆம் பக்கங்களில் விரிவாகக் கண்டறியலாம்). வானரப் படைகளை ஆயிரம் ஆயிரமாகவோ அல்லது கோடிகோடியாகவோ உறையிட்டு எண்ணுவதற்குச் சரி யாக உலகத்து உயிர்கள் இருக்குமாம். அங்கனமெனில், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும்விடப் பல மடங்கு வானரப் படைஞர் உள்ளனர் எனக் கொள்ளல்வேண்டும். இது உயர்வு நவிற்சி அணி யாகும். மிகுதியைக் குறிக்கக் கம்பருக்கு உறையிடல் என்னும் சொல்லாட்சி கைகொடுத்து உதவுகிறது.