பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 233 படைகள் வந்து விட்டதால் இனியும் காலம் தாழ்க் காமல் எட்டுத்திசைகளிலும் தேடுபவர்களை அனுப்பி ஆவன செய்விக்கவேண்டும் என இலக்குவன் தூண்ட, இராமன் சுக்கிரீவனிடம் கூறலானான்: "ஈண்டு தாழ்க்கின்றது என்னினி எண்திசை மருங்கும் தேண்டு வார்களை வல்லையில் செலுத்துவ தல்லால் நீண்ட நூல்வலாய் என்றனன் இளையவன், நெடியோன் பூண்ட தேரவன் காதலற்கு ஒருமொழி புகலும்” (39) இளையவன் இலக்குவன், நீண்ட நூல்வலான், நெடியோன் = இராமன். பூண்ட தேரவன் = ஞாயிறான். தேரவன் காதலன் = ஞாயிறு மகன் சுக்கிரீவன். நீண்ட நூல் என்பது கல்வியின் பரப்பை அறிவிக்கிறது, கல்வி யென்னும் பல்கடல் என்பது திருவாசகம். இதிலே, அரசியல் நூல், போர் நூல் முதலியனவும் அடங்கும். நூல் வல்ல அண்ணா! விரைந்து செயல்பட வேண்டுமென முடுக்கி விடுகிறான் இலக்குவன். ஞாயிறானுக்கு ஒய்வே கிடையாதாதலால், அவனது தேர் எப்போதும் குதிரை பூட்டப்பட்டிருக்கும் - ஆதலால் பூண்ட தேரவன்' எனப் பட்டது.