பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நாட விட்ட படலம் சீதையைத் தேடுமாறு சுக்கிரீவன் வானரப்படைஞரைப் பல பக்கங்களிலும் அனுப்பியதைக் குறித்தபடலம் இது. நாடவிடு படலம் எனவும் சில சுவடிகளில் உள்ளது. நாட விடல் = தேடவிடல். . ஒரு தோற்றம் இராக்ன் சுக்கிரீவனிடம் படை மிகப் பெரியது போலும் என்று பாராட்டினான். அதற்குச் சுக்கிரீவன், எழுபது வெள்ளம் படை அறிவினால் அறிந்தவர்களால் இரு தோற்றமாகச் (சுமாராகச்) சொல்லும் அளவே தவிர உண்மையில் அதன் அளவைச் சரியான எண்ணிக்கையிட்டுச் சொல்ல இயலாது என்றான். - "ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று ஆற்ற லாளர் அறிவின் அமைந் ததோர் மாற்றம் உண்டு அது வல்லது மற்றுமோர் தோற்றம் என்றிதற்கு எண்ணும் முன் சொல்லுமோ” (2) எழுபது கோடி வெள்ளம் என்பது ஒர் அளவாகச் சொல்லப்படுகிறது. இதை நம்பி ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்னும் கூடுதலாகவும் இருக்கலாம். காற்று விரைவு இனி நடக்க வேண்டியதைக் கவனி என்று இராமன் கூற, சுக்கிரீவன் அனுமனை நோக்கி, நீ நின் தந்தையைப் போல் மிக விரைவாக மூன்று உலகிலும் புகுந்து தேடும்