பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 235 வல்லமை உடையை. ஆனால் நீ விரைந்து புறப்படாமல், மற்ற வானரர்களின் செயலைக் கண்டுகொண்டுள்ளாயோ - என்றான். 'அவனும் அண்ணல் அனுமனை ஐயரீ புவனம் மூன்றும் கின்தாதையின் புக்குஉழல் தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை கவனமாக் குரங்கின் செயல் காண்டியோ' (5) அவனும் = சுக்கிரீவனும். தவன வேகம் = மிக்க விரைவு. தாழ்த்தனை = காலம் கடத்துகின்றனை. தாதை = தந்தையாகிய காற்றின் வேந்தன் (வாயு பகவான்). ‘மனோவேகம் வாயு வேகம் என விரைவின் அளவைக் குறித்துக் கூறுவ துண்டு. அந்த வாயுபகவானின் மகனாகிய நீ (அனுமன்) தந்தையைப் போலவே விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறான். தெற்கு வழி சுக்கிரீவன் ஒவ்வொரு திசைக்கும் இரண்டு வெள்ளம் தானையுடன் ஒவ்வொரு படைத்தலைவரை அனுப்பினான். தென்திசையிலேதான் இராவண்ன் இருக்கக்கூடும் என உய்த்துணர்ந்து, அந்தத் தென்திசைப்பக்கம் படையுடன் அனுமனை அனுப்பினான். தென் திசை நோக்கிப் போக வேண்டிய வழிகளையும் பின்வருமாறு கூறுகிறான். விந்தம் முதலில் விந்த மலையை அடையவேண்டும். அது, திருமாலைப் போலவே ஆயிரம் முடிகளை (உச்சிகளை) உடையது; தொழுதற்கு உரியது "ஈண்டுகின் றெழுந்து ஈரைந்துநூறு எழில் தூண்டு சோதிக் கொடுமுடி தோன்றலால் நீண்ட நேமிகொலாம் எனநேர் தொழ வேண்டும் விந்த மலையினை மேவுவீர்” (12)