பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கம்பர் உண்மையிலேயே கவிப்பேரரசரே யாவார். புணருங்காலும் பொலிவு இராது; இரைதேடுங்காலும் பொலிவு இராது; அலுப்பான தோற்றமே காணப்படும். புணராமலும் இரைதேடாமலும் வாளா அமர்ந்திருக்கும் போதே பொலிவான தோற்றம் காணப்படுமாதலின், 'பொலிவன வாளம்' என்றார் ஆசிரியர். - கழைக் கூத்தாட்டு கம்பர் பொய்கையில் ஒரு கழைக் கூத்தாட்டம் நிகழ்வதாகக் கற்பனை செய்துள்ளார். கழைக் கூத்தி கையால் வாளை வீசிக்கொண்டு கயிற்றின்மேல் நடந்து நடனம் ஆடுகின்றாள். பார்வையாளர்கள் நன்றாயுள்ளது என்று கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள். இதை அப்படியே பொய்கையில் பொருத்திப் பார்க்கலாம். நீரில் அசைந்து காணப்படும் அலைதான் கயிறு. நீர் நாய்தான் கூத்தி. ஆரவாரம் தேரைகள் கத்துவது. பாடல்: "வலி நடத்திய வாளென வாளைகள் பாய ஒலி நடத்திய திரைதொறும் உகள்வன நீர்நாய் கலிங்டக் கழைக் கண்ணுள ரெனாடம் கவினப் பொலிவுடைத் தெனத் தேரைகன் புகழ்வன போலும் (21) உகளுதல் = அங்குமிங்கும் அசைந்தாடுதல், கலி = ஆரவாரம். கழைக் கண்ணுளர் = கழைக் கூத்தாளர். பொய்கையில் வாளைகள் பாய்கின்றன; நீர் நாய்கள் அலைகின்றன; தேரைகள் கத்துகின்றன. இந்த நிலைமை கழைக் கூத்தாட்டாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. கம்பர் உள்ளிட்ட புலவர்கள் பலர் மயில் ஆடும் நடனக் காட்சியைக் கற்பனை செய்து காட்டியுள்ளனர். அது வேத்தியல். இங்கே கம்பர் கழைக் கூத்தாட்டைக் கற்பனை செய்துள்ளார். இது பொதுவியல் போன்றது போலும்!