பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திருமாலுக்கு ஆயிரம் முடி உண்டு என்பது ஒரு வகைத் தோற்றத்தைக் குறிக்கிறது. உலகை அளக்க அவன் நீண்ட உருவம் எடுத்ததால் நீண்ட நேமி எனப்பட்டான். ஆயிரம் உச்சியை உடைய விந்த மலையைக் கண்டதும் திருமாலின் தோற்றம் உளக்கண் முன் தோன்றுதலால் அது வணங்கத் தக்கது. கருமதை ஆறு பின் நருமதை ஆற்றை அடைய வேண்டும், அந்த ஆறு தேவரும் நீராடுவது; அதில் உள்ள மலர்களில் தேன் 'உண்ணும் வண்டுகள் பஞ்சமம் பாடக்கூடியது. அதன் கரைகளி லுள்ள மணிகளால் இருளை ஒட்டக்கூடியது: "தேடி அவ்வரை தீர்ந்தபின் தேவரும் ஆடு கின்றது அறுபதம் ஐந்தினைப் பாடு கின்றது பன்மணியால் இருள் ஓடு கின்ற கருமதை உன்னுவீர் (13) அறுபதம் = ஆறுகால்களை உடைய வண்டுகள். இது சினையாகுபெயரால் வந்தது. இசைக்கலையில், சட்சம், இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என ஏழுசுரங்கள் இசைக்கப்படுகின்றன. இவற்றுள் ஐந்தாவது பஞ்சமம் என்பது. இது தமிழில் ஐந்து எனக் கம்பரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கம்பரின் இசைப்புலமை புலனாகும். முண்டகத் துறை மேலும் கூறுகிறான்: நருமதையை அடுத்து ஏமகட மலை, வடபெண்ணை, தண்டக வனம் ஆகியவற்றைத் தாண்டின், முண்டகத் துறையை அடைவீர். ஆங்கே, அறவழிநிற்கும் நல்லோர் செல்வம் பலர்க்கும் பயன்படுவது போல் பலர்க்கும் நிழலாலும் கனிகளாலும் பயன்தரும்