பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் :- - - -237 ב"י אי- איצי-----יי பொழில் உள்ளது. அப்பொழிலில் கனிகள் காலம் அல்லாத காலத்திலும் பழுக்கும். அக்கனிகள் உயர் பண்புடைய மங்கையரின் வாயிதழ் நீர்போல் சுவை தருவனவாகும்: “ஞாலம் நுங்குற நல்லறத்தோர் பொருள் போல நின்று பொலிவது பூம்பொழில் சீல மங்கையர் வாய்எனத் தீங்கனி காலம் இன்றிக் கணிவது காண்டிரால்’ (18) என்பது பாடல். நயமான நல்லவரிடம் உள்ள செல்வம் பயன் மிக்க பழுமரம் ஊர்க்குள்ளே பழுத்ததுபோல் பலர்க்கும் எளிதில் பயன்படும் என்னும் கருத்துடைய 'பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்' (2.16) என்னும் குறட்பா இங்கே கம்பரின் பாடல் வடிவில் காணப்படுகிறது. அக்கனிகள் மங்கையரின் இதழ்நீர் போன்று இனிமைச் சுவை உடையதாம். இங்கே, "பாலொடு தேன்கலங் தற்றே பனிமொழி வாலெயிறு ஊறிய நீர்' (1.121) என்னும் குறட்பாவும், தஞ்சை வாணன் கோவையில் உள்ள தேருந்தொறும் இனிதாம் செந்தமிழ் போன்று இவள் செங்கனிவாய் ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே’’ என்னும் பாடல் பகுதியும் ஒப்பு நோக்கத்தக்கன. இப்பொழிலில் கனிகள் காலம் அல்லாக் காலத்திலும் பழுக்குமாம். இது, "உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா (மூதுரை-5) என்னும் ஒளவையின் கூற்றுக்கு அறைகூவல் விடுகிறது.