பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு சுவணம் அவ்விடத்தினின்றும் அகன்று பாண்டுவின் மலை, கோதாவரி ஆகியவற்றைக் கடந்தபின் சுவணநதி தென் படும். இந்த ஆறு, அருள் ஆறும் வெப்பமானது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் குளிர்ந்தது; வெயில் நுழையாத படி விரிந்து பரந்த பூஞ்சோலைகளை அருகில் கொண்டது; கரைசார்ந்துள்ள மணிகளால் இருளை ஒட்டக் கூடியது; தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி முருகக்கடவுள் தனியாக வந்து எழுந்தருளியிருப்பது, 'அவ்ஆறு கடந்து அப்பால் அறத்தாறே எனத் தெளிந்த அருளின் ஆறும் வெவ்ஆறாம் எனக் குளிர்ந்து வெயில் இயங்காவகை இலங்கும் விரிபூஞ் சோலை எல்.ஆறும் உறத்துவன்றி இருள்ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட தெவ்ஆறு முகத்து ஒருவன் தனிக் கிட்த் கவனித்தைச் சேர்தி மாதோ (2) அருளின் ஆறு=அருளாகிய ஆறு, இந்த அருள் ஆறு என்னும் ஒரே சொல், நெறி, நதி, ஆறு (6) என்னும் எண் ஆகிய பல பொருள்க்ளில் தொடர்ந்து வருவதால் இந்த அமைப்பினைச் சொல் பொருள். பின்வரு நிலை அணி என்பர். . . வெயில் இயங்காவகை இலங்கும் விரிபூஞ்சோலை என்னும் பகுதியில் உள்ள கருத்து, திருமுருகாற்றுப் படையிலும் வந்துள்ளது. "மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம் (42) இது முருகாற்றுப்படை அடி. இதில் உள்ள மந்தியும் அறியா, என்பதற்கு குரங்கும் அறியாத' என்னும் பொருள்