பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . * - - 239 ، ، . نة ـ لم ت: خ: ، : - ست " : ت கூறுவதன்றி ஞாயிறும் (வெயிலும்) அறியாத' என்னும் பொருள் கூறுதலும் உண்டு. மந்தி என்பதற்கு ஞாயிறு என்னும் பொருளும் உண்டு என்பதை, வாகீச முனிவர் இயற்றிய ஞானாமிர்தம் என்னும் நூலில் உள்ள. 'எயிறும் துண்டமும். மந்தியும் வாணியும். இழப்ப' (33-6) என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். மற்றும், மந்தியும் அறியா என்பது, ‘மந்தியும் அறியா மரம்பயில் ஒரு சிறை (1947) என நற்றிணையிலும், மந்தியும் அறியா மரம் பயில் இறும்பு’ (92:8) என அகநானூற்றிலும் கூட இடம்பெற்றுள்ளது. இத்தகு வெயில் நுழையாத சோலை சூழ்ந்த சுவணப் பகுதியில், தேவர்களின் வேண்டுகோளால் முருகன் வந்து தனியாகத் தங்கியிருக்கின்றானாம். இது ஒரு புராணக்கதை. அருந்ததி மலை சுவனத்தைக் கடந்த பின், சந்திரகாந்தம், கொங்கணம், குலிந்தம் ஆகிய இடத்தைத் தாண்டியதும் அருந்ததி மலை காணப்படும். அரன் (சிவன்) மேலானவன் என்றும், அரி (திருமால்) மேலானவன் என்றும் வாதிடும் அறிவிலார் வீடுபேறு அடைய முடியாததுபோல், இம்மலைக்குள் செல்வதும் அரியதாகும். - - அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைவரிய பரிச்ே போல் புகலரிய பண்பிற் நான் (24) அரியும் சிவனும் ஒண்ணு (ஒன்று)-அதை அறியாதவர் வாயில் மண்ணு' என்னும் முதுமொழி பலரும் அறிந்தது. இதைக் கம்பர் இந்தப் பாடலில் அமைத்திருப்பதைக்