பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கொண்டு கம்பர் மத வேற்றுமை இல்லாதவர் என்னும் பேருண்மை புலப்படும். வேங்கடம் அருந்ததி மலைக்கு அடுத்து மரகதமலை வரும். அதையும் கடந்து செல்லின் வேங்கட மலை தென்படும். அம்மலை, வட மொழிக்கும் தென் மொழிக்கும் இடையில் இரண்டிற்கும் எல்லையாயுள்ளது; நான்கு மறைகளும் ம்ற்றை நூல்களும் கூறும் பொருளுக்கு முடிந்த முடிபானது; நல்லறத்திற்கு இருப்பிடமானது. புகழ் மிக்க மெய்ம்மை போல் ஒப்பற்றது; தேன்வளம் நிறைந்தது - என்று போற்றி உர்ைக்கப்பட்டுள்ளது. - வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்திற்கு ஈறாய் வேறு - புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த - மெய்யேபோல் பூத்து கின்ற - அடைகூற்றும் தண்சாரல்ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ' (26) வடசொல் = சமசுகிருதம், தென்சொல் = தமிழ். வேங்கட மலையைத் தமிழ்நாட்டின் வட எல்லையாகப் பலரும் கூறுவது சிக்கலானது - ஆராயத்தக்கது. இப்போது வேங்கடம் தமிழ் நாட்டில் இல்லை; ஆந்திர நாட்டில் உள்ளது. திருப்பதி நகரிலிருந்து மேலே மலைக்குச் செல்லும் பேருந்தில் (பஸ்ஸில்) திருப்பதி - திருமலை என்று போடப்பட்டுள்ளது. திருமலை என்னும் அழகிய தனித் தமிழ்ச் சொல்லால் குறிப்பிடப்படும் இடம் தெலுங்கு நாட்டில் இருப்பது எப்படி? வேங்கடத்திற்குத் தெற்கே உள்ள சில ஊர்களும் ஆந்திரநாட்டினவாக உள்ளன.