பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 24 I இதிலிருந்து தெரிவதாவது: ஆந்திரர்கள் சிறிது சிறிதாக - கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழ்பேசும் பகுதியை நோக்கி வந்துவிட்டனர் - என்பதாம். மலையாளம் சமசு கிருதத்திலிருந்து வந்தது என்று சொல்லும் பல மலையாளிகளைப் போல், தெலுங்கும் சமசுகிருதத்திலிருந்து வந்தது என்று பலர் எண்ணிக்கொண் டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கம்பராமாயண வெளியீட்டில் இந்தப் பாடலுக்கு உரை வரைந்துள்ள புலவர் திரு செ. வேங்கடராமச் செட்டியார், வேங்கட மலைக்கு வடக்கே உள்ள தெலுங்கு மொழி முதலிய எல்லா மொழிகளும் வடமொழி வந்தன ஆதலின் அவற்றை யும் வடமொழியாகவே கொண்டு வடசொற்கு வரம்பாகி என்றார்” என வரைந்துள்ளார். . . . - தமிழும் வடமொழிவழி வந்தது என்று கூறும் மேலோர்களும் உள்ளனர். இந்நிலையில், ஆங்கில நாட்டி லிருந்து வந்த கால்டுவெல் (Gald well) என்னும் ஆங்கில அறிஞர், மொழி ஆராய்ச்சி செய்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் ஓரின மொழிகள். இவை திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று வற்றி வறண்டு போன திராவிட இன மூளை’கட்குத் தெரிவித்தார். திராவிட மொழிகள் தமிழ்மொழி வழி வந்தன என்பதை, ೯೯r 'தொல் திராவிடமொழி கண்டு பிடிப்பு’ என்னும் நூலில் விரிவாக எழுதித் தக்க சான்றுகளுடன் வலியுறுத்தியுள்ளேன். தமிழ் நாட்டின் வடஎல்லை வேங்கடம் என்று கூறப் பட்ட காலத்தில் அது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கும் முன்பு, வேங்கடத்தின் வடக்கே உள்ள ஏதோ ஒரு பகுதி தமிழ் நாட்டின் வடக்கு எல்லையாக இருந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆந்திரர் தெற்கே வேங்கடம்வரை வந்தபோதுதான்,