பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வேங்கடம் தமிழின் வடஎல்லை என முதல் முதலாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கால்டுவெல் போன்றவர்கள் இல்லாதிருப்பின், தமிழும் சமசுகிருதத்தின் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கும். நிற்க - வேங்கடத்தின் ஒப்புயர்வு அற்ற பெருமைக்கு மெய்ம்மை - உண்மை ஒப்புமையாக்கப்பட்டுள்ளது. ஈண்டு, 'பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்' (296) என்னும் குறள் ஒப்பு நோக்கத்தக்கது. மேலும் வேங்கடத் தின் பெருமை பேசப்படுகிறது. இருவினையும் வேறு எவ்வினையும் செய்யாது, இந்திரச் செல்வத்தையும் பிச்சை உணவையும் சமமாகக் கருதி, பிறவி மீண்டும் வராதபடி, தீவினைகளின் பகைவராய்ள்ள மெய்யுணர்வு மேலோர்கள் ஆண்டிருத்தலின் அவர்கள் இங்கிருந்தபடியே வ்ணங்கத் "இருவினையும் இடைவிடா வெவ்வினையும் இயற்றாதே இம்ையோர் ஏத்தும் திருவின்னயும் இடுபதம்தேர் சிறுமையையும் முறைஒப்பத் தெளிந்து நோக்கிக் கருவினையது இப்பிறவிக்கு என்றுணர்ந்தங் கதுகளையும் கடையில் ஞானத் தருவின்ையின் பெரும்பகைஞர் ஆண்டுளர்கண்டு. இருந்தும் அடிவணங்கற் பாலார்' (27) - நல்வின்ை இல்லை என்னும் இருவினையும் நீக்கத் தக்கன. "இருள்சேர் இருவினை" என்பது வள்ளுவம். இந்திரச் செல்வமும் ஐயமேற்று உண்ணும் ஏழ்மையும் ஒன்றே எனக்கொள்வர் அருளாளர். "சங்கநிதி பதுமகிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம்'மதிப்பேம் அல்லேம்'