பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 243 என்னும் நாவுக்கரசரின் தேவாரப் பாடலில், இந்திர உலகச் செல்வம் எள்ளப்பட்டிருப்பது காணலாம். கடை இல் ஞானம் = எல்லை இல்லாத மெய்யறிவு. பிறவிப்பெரும் பிணியைத் தரும் பொல்லா வினைகளின் பகைவர்களாக ஆண்டிருக்கும் பெரியோர்களை இங்கிருந்தபடியே வணங்க லாம். வேங்கடம் கடந்ததும் தொண்டை நாடு வரும். பொன்னி தொண்டை நாட்டைக் கடந்தால், பொன்னி என்னும் தெய்வ ஆற்றின் இருகரையும் தெரியும்: "நாடுறுதிர் உற்றதனை நாடுறுதிர் அதன்பின்னை நளிநீர்ப் பொன்னிச் சேடுறுதண் புணல்தெய்வத் திருந்தியின் இருகரையும் தெரிதிர் மாதோ' (29) பொன்னி - காவிரி ஆறு. அது தெய்வத் திரு ஆறாம். காவிரி தெய்வ ஆறு - புண்ணிய ஆறு ஆதனால் பலரும் அதில் நீராடுவர் எனப் பல நூல்கள் கூறியுள்ளன. "தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர் (சிலம்பு-5; 165, 166) "தெய்வக் காவிரித் தீதுதிர் சிறப்பும்" - (சிலம்பு-10 - கட்டுரை-8) 'பாவம் தீர்புனல் மல்கிய பாற்றுறை” - (சம்பந்தர் தேவாரம்) 'ஆடுவோர் பாவம் தீர்த்து. திகழும் மாகாவிரி” - (சம்பந்தர் தேவாரம்) சிலப்பதிகாரத்திற்கும் தேவாரத்திற்கும் பிற்பட்ட காலத்தவராகிய கம்பரும் காவிரியைத் தெய்வத் திருநதி எனப் போற்ற மறக்கவில்லை.