பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மூன்று தமிழ் நாடுகள் சோழநாடு சென்றால், துறக்க உலகம் (சொர்க்கம்) சென்றவர்போல் மனம் மயங்கி மகிழ்ந்து, தம் உருவை மாற்றிச் சோழ நாட்டார் போலவே கோலம் புனைந்து அங்கேயே மறைவாகத் தங்கி விடுவர் சென்றவர்கள். நீங்கள் அங்கேயே தங்காமல், சோழநாட்டு இன்பத்தைக் கனவு போல் மறந்து, மலைநாடு சென்று தேடுங்கள்; அங்கும் கிடைக்காவிடின் தமிழ் நாட்டிற்குச் செல்வீராக. "துறக்கம் உற்றார் மனமென்ன துறைகெழுநீர்ச் சோணாடு புகுந்தோர் தொல்லை மறக்கம் உற்றார் அகம்மலர்ந்து மறைந்துறைவர் அவ்வழி நீர் வல்லை.எகி, உறக்கம் உற்றார் கனவு உற்றாரென . . . . உணர்வினொடும் ஒதுங்கி, மணியால்ஓங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ' (30) சோழ நாட்டிலேயே தங்கிவிடக் கூடாது என்பதற்காக வல்லை ஏகி, ஒதுங்கி என்னும் சொற்கள் கூறப்பட்டன. சோணாடு - சோழநாடு. மலையில் மணிகளால் சுடர் வீசுகின்ற மலைநாடு என்பது சேரநாடு. மலையாளம் என்று கொள்ளலாம். அதன் பின் தமிழ்நாடு என்றது பாண்டிய நாட்டையாகும். தொண்டைநாடு, சோழநாடு, சேரநாடு, பாண்டிய நாடு ஆகிய அனைத்தும் தமிழ்நாடு எனப்படினும், பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை யில் கழகம் (சங்கம்) அமைத்துச் சிறப்பாகத் தமிழ் ஆராய்ந்ததால், பாண்டிய நாடு விதந்து தமிழ்நாடு எனப்பட்டது. சேக்கிழார் பானல்வயல் தமிழ்நாடு’ (பெ. பு. ச. பு. 652) என்று கூறியுள்ளார். இங்கே, மாணிக்கவாசகரின் திருக்கோவையாரி லுள்ள