பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 245 'சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிங்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழ்' என்னும் பகுதியும், பரஞ்சோதி முனிவரின் திருவிளை யாடல் புராணத்தில் உள்ள - 'கண்ணுதல் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தஇப் பசுங் தமிழ்” என்னும் பகுதியும் இணைத்து எண்ணத்தக்கன. வரையும் கடலும் தென்தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டில் பொதிய மலை ஒன்றுள்ளது. அதில் தமிழ்ச்சங்கம் வைத்து அகத்தியமுனிவர் தமிழ் வளர்த்து வருகிறார். அம்மலையை இடப்பக்கமாகத் தள்ளிச் சென்றால், பொருநை என்னும் ஆற்றைக் காண்பீர். அதைக் கடந்து செல்லின், மயேந்திர மலையையும் அதையடுத்துக் கடலையும் காண்பீர்: "தென் தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற் lரேல் என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான் அம்மலையை இடத்திட்டு ஏகிப் பொன் திணிந்த புனல்பெருகும் பொருநைஎனும் திருநதி பின்பு ஒழிய நாகக் கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும் கடலும் காண்டிர்” (31) முழுத் தமிழ்நாட்டையும் நோக்கப் பாண்டிய நாடு தென் தமிழ் நாடாகும். பாண்டிய நாட்டிலேயே மதுரையும் அதைச் சார்ந்த பகுதிகளும் வட தமிழ்நாடு எனவும், திருநெல்வேலியும் அதைச் சார்ந்த பகுதிகளும் தென் தமிழ்நாடு எனவும் சிலரால் குறிப்பிடப்படுகின்றன.