பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 21 வாளை மீனின் பளிச்சென்ற பாய்ச்சலுக்கு வாளின் பளிச்சென்ற வீச்சை உவமையாகக் கூறுதல் மரபு. இதனை 'வாளை வாளின் பிறழ’ (390) என்னும் நற்றிணைப் பகுதியாலும், வாளென வாளை பாய்வன” (1180), 'வாளென வாளை பாய” (2583) என்னும் சீவக சிந்தா மணிப் பகுதிகளாலும் இன்ன பிறவற்றாலும் அறியலாம். 23-ஆம் பாடல் கருத்து: இராமன் இணைந்திருக்கும் சக்கரவாளப் பறவைகளையும் இணைந்திருக்கும் அன்னங் களையும் நோக்கிப் புலம்புகின்றான். இணைந்திருந்த பறவைகளையும் விலங்குகளையும் கண்டபோது அப்பர் அடிகட்கு இறைவன் - இறைவியின் நினைவு வந்ததாம். (திருவையாற்றுத் தேவாரப் பதிகம்). சிந்தினவோ மேலும் இராமன் பொய்கையை நோக்கிப் புலம்பு கிறான். ஒ, பொய்கையே! குவளை போன்ற சீதையின் கண்களையும், ஆம்பல் போன்ற அவளது வாயையும், தாமரை போன்ற அவள் முகத்தையும், கொடி போன்ற அவள் இடையையும், வள்ளை போன்ற அவள் காது களையும், அலை போன்ற அவள் வயிற்று மடிப்பையும், வரால் மீன் போன்ற அவள் கணைக்கால்களையும், ஆமை போன்ற அவள் புற அடிகளையும் நின்னிடத்தே காண் கின்றேன். இவை உன்னிடம் எவ்வாறு வந்தனவோ? ஒருவேளை, இராவணன் அவளைக் கடித்து உண்ணத் தொடங்கியிருக்கலாமோ- அப்போது இவ்வுறுப்புகள் மேலே யிருந்து உன்னிடம் சிந்தி வீழ்ந்திருக்கலாமோ? என்று புலம்பு கிறான் பாடல்: 'விரிந்தகுவளை சேதாம்பல் விரைமென் கமலம் கொடிவள்ளை தரங்கம் கெண்டை வரால் ஆமையென்றித் தகைய தமைநோக்கி