பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இப்ப்ாடலில் ஒரு சிக்கல் உள்ளது. ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் ஒர் அகத்தியர் கூறப் பட்டுள்ள்ார் என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்' என்றும் கம்பரால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் காட்டில் இராமனை வரவேற்றாராம். இங்கே பொதிய மலையை உறைவிடமாகக் கொண்டு தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் முனிவன் ஒருவன் இருப்பதாகவும் கம்பர் கூறியுள்ளார். பொதியம் என்றும் அவன் உறைவிடமாம். அகத்தியர் பொதிய மலையில் இருப் பதாகப் பலரும் கூறுவர். அங்ஙனமெனில், இந்திய நாட்டின் நடுப்பகுதியின் காட்டில் ஒர் அகத்தியனும், நாட்டின் தெற்கே பொதியத்தில் ஒர் அகத்தியனும் இருந்தனர் - இவர்கள் வெவ்வேறானவர் என்று கூறுவதா? அல்லது, ஒர் அகத்தியரே மாறி மாறி அங்கும் இங்குமாகப் போய் வருவார் என்பதா? இப்பாடலில், அகத்தியன் என்னும் பெயர் கூறாமல், திருமுனிவன்’ என்று கூறியிருப்பதால், இவர் அகத்தியரினின்றும் வேறான முனிவரா? ஒரே குழப்பமாக உள்ளது. இருவரும் தமிழோடு தொடர்புடையவர்கள் எனக் கூறுவதால்தான் குழப்பத்திற்கு இடம் உண்டாயிற்று. அகத்தியர் என்பவர் பெயரால் பல கதைகள் கூறப்படு கின்றன. அகத்தியர் என்பவர் எழுதியண்வாகப் பல்வேறு நூல்கள் கூறப்ப்டுகின்ற்ன. ம்ருத்துவ நூல்கள் சில அகத்தியர் பெயரால் உள்ளன என்வே, அந்த அகத்தியர் வேறு - இந்த் அகத்தியர் வேறு என அரை மனத்தோடும் குன்ற மனத்தோடும் கூறுவன்தத் தவிர் வேறு சிக்கல் அவிழ்ப்பு தெரியவில்லை. - பொருநை - தாமிரபரணி ஆறு. ஆறு பின்பு ஒழிய என்றால், ஆற்றைக் கடந்து தாண்டி - என்பது கருத்தாம்: