பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 247 இந்த இராமாயணப் பாடலின்படி, தமிழ்நாட்டின் முடிவில் மயேந்திர மலை உள்ளது; அதை அடுத்துக் கடல் உள்ளது. அந்தக் கடலுக்கு எதிர் கரையில் இராவணனது இலங்கை இருந்தது என்று கொள்ளல் வேண்டும். அனுமன் இந்த மயேந்திர மலையில் இருந்து கொண்டுதான் கடலைத் தாவித் தாண்டின்ான் என்பது கம்பராலேயே சுந்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. - கடலைத் தாண்டி ஒரு திங்கள் காலம் அக்கரையில் தேடி மீள வேண்டுமெனச் சுக்கிரீவன் அனுமனிடம் கூறி, விரைந்து விடை பெற்றுச் செல்லுக என்று ஏவினான். அடையாளம் அறிவித்தல் சீதையைத் தேடப் புறப்பட்ட அனுமனிடம் இராமன் சீதையின் அடையாளங்களைக் கூறலானான்: ஒருவரை விட்டு ஒருவரைச் சீதை எனத் தவறாகப் புரிந்து கொள்ளாத படி அடையாளம் கூறல் இன்றியமையாததுதான். சீதையின் அடி முதல் முடிவரை (பாதாதி கேசமாக) உள்ள அனைத்து உறுப்புகட்கும் அடையாளம் கூறுகிறான். பிற ஆடவர் பார்க்க முடியாத - பார்க்கக் கூடாத உறுப்பின் பத்திகட் கெல்லாம் அடையாளம் கூறுகிறான். இது இன்றியமை யாததா? இல்லையே. அடி முதல் முடி வர்ை (பாதாதி கேசம்) என்ற மரபை ஒட்டிக் கம்ப்ர் க்ண்ன்ை முடிக் கொண்டு உவமை கூறியுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மற்றும், ஒவ்வோர் உறுப்புக்கும் அடையாளம் சொல்லும் முறை ஒன்று போலவே உள்ளது. அதாவது: ஒவ்வோர் உறுப்புகட்கும் இலக்கியங்களில் புலவர்கள் என்னென்ன உவமைகள் சொல்லுவார்களோ - அவற்றை யெல்லாம் கம்பரும் குறிப்பிட்டு, ஆனால் இவை சீதையின்