பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு உறுப்புகட்கு உவமையாக மாட்டா - இவற்றினும் சீதையின் உறுப்புகள் சிறந்தவை என்று இராமன் சொல்வதாக எழுதி யுள்ளார். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்ற மாதிரியில் உள்ளது இது என்று மறைக்காமல் கூறுவதில் தவறொன்றும் இலது. கம்பர் இதற்காகச் செலவிட்டிருக்கும் பல பாடல்களை இலக்கிய மரபு என்ற அடிப்படையில் ஏற்று அமைதியுறுவதைத் தவிர வேறு வழியில்லை. கம்பரின் நிறைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பின் போதாது குறையிருப்பினும் தயங்காது கூறுதலே முறையாகும். சொல்லச் சொன்னவை இராமன் அனுமனிடம் உறுப்பு அடையாளங்களைக் கூறிய பின்பு, பின்வருவனவற்றைச் சீதையிடம் சொல்லு மாறு பணிக்கிறான்: சனகனின் வேள்வியைக் காண மிதிலையில் முனிவனுடன் சென்றபோது, அன்னம் ஆடும் துறைக்கு அருகே கன்னி மாடத்தில் நின்றிருந்தவளை முதல் முதல் கண்ட நிகழ்ச்சியை யான் நினைவுபடுத்தியாகக் கூறுக: 'முன்னைநாள் முனியொடு முதியர்ே மிதிலைவாய்ச் சென்னிநீள் மாலையான் வேள்வி காணியசெலசெல அன்னம் ஆடும்துறைக்கு அருகுகின் றாளை அக் கன்னிமாடத் திடைக் கண்டதும் கழறுவாய்' (67) மாலையான் = சனகன். இராமாயண வரலாற்றைப் பலர் எழுதியுள்ளனர். இராமனும் சீதையும் முதன் முதலாக ஒரு நீர்த் துறையில் கண்டதாக ஒரு நூல் கூறுகின்றது. கம்பரோ, கன்னி மாடத்து மாடி மீது சீதை நிற்க, இராமன் கீழிருந்து நோக்கியதை அண்ணலும் நோக்கினான் அவளும் ந்ோக்கினாள் என்று குறிப்பிட்டுள்ளார். கம்பர் நீர்த் துறையையும் விட்டா ரிலர்; அன்னம் ஆடும் நீர்த்துறையின் அருகே கன்னி மாடத்தில் கண்டதாகக் கூறியுள்ளார். கன்னி