பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 249 மாடக் கட்டடத்தின் அருகே நீராடும் தடாகமும் இருந் திருக்கும் போலும். சேவல் அன்னமும் பெடை அன்னமும் நீராடும் சூழ்நிலையைக் கண்டவர்கள், தாங்களும் ஒரு வகைக் குறிப்போடு ஒருவரையொருவர் கண்டு கொண்டு உள்ளனர். 'அன்னச் சேவல், அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற' (5:123-126) என்னும் மணிமேகலைப் பாடல் பகுதியால், அன்னச் சேவலும் பெடையும் ஒன்றாக நீர் நிலையில் ஆடும் என்பதை அறியலாம். மற்றும், கூறுகிறான். நான் காட்டிற்குப் புறப்பட்ட போது தானும் வருவதாக அவள் கூறியபோது, நீ என் பின்னே வர விரும்புகிறாயா? இவ்வளவு நாள் எனக்கு இன்பம் செய்த நீ, என்னுடன் காட்டுக்கு வந்து துன்பம் தரப் போகிறாயா? - என்று நான் சொன்னதையும் சொல்லுவாய்: "முன்புதான் அறிகிலா முனிநெடுங் கானிலே என்பினே போதுவான் கினைதியோ ஏழைநீ இன்பமாய் ஆருயிர்க்கு இனிமையா யினை இனித் துன்பமாய் முடிதியோ என்றதும் செப்புவாய்” (70) காட்டிற்கு வருவேன் என்கிறாயே - அது நெடுங்கான் ஆயிற்றே என்றான். அதாவது, சிறிய காட்டுப் பகுதியாயின் விரைவில் கடந்து விடலாம் - இதுவோ நீண்ட காடு . இதை எவ்வாறு கடக்க முடியும்? - மற்றும், செல்பவர்கள் விரும்பாமல் முனிவு (வெறுப்பு) கொள்ளக் கூடிய காடு. மேலும், இதுவரையும் யானே சென்று பழகி யறியாத காடு - இதில் நீ எப்படி வழி கடப்பாய் - நீயோ ஏழை - என்றான். ஏழை = பெண்.