பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மற்றும் - ஒருவர் தனியே ஊருக்குச் செல்லின், ஒரு கவனமோ - பொறுப்போ தேவையின்றி எளிதாய்ச் செயலாற்றி வந்து விடலாம். மனைவியையும் உடன் அழைத்துச்செல்லின், அவளைக் கவனமுடன் காக்கவேண்டும்; தனியாய் விட்டு எங்கும் சென்று வர முடியாது; பல வகை களிலும் ஆடவனுக்கு அவள் ஒரு சுமையாகவே தோன்று வாள் - அதனால்தான், நீ காட்டுக்கு வந்து எனக்குத் துன்பமாயிருக்கப் போகிறாயா என்றான். இராமன் முன்னறிவோடு (தீர்க்க தரிசனத்துடன்) கூறியது நடந்தே விட்டது - பலித்தே விட்டது. பின்னால் பெருந் துன்பம் வாழ்க்கை முழுவதும் பெருந்துயரம் ஏற்படக் காரண மாயிற்று. இராமன் திரோதாயுகத்தில் இருந்தான்; அதனால் மனைவியை உடன் அழைத்துச் செல்ல அஞ்சினான். கலியுகமாகிய இந்தக் காலத்தில் உள்ள இளைஞர்கள், தனியாகச் செல்வதனினும் மனைவியையும் உடன் அழைத்துக்கொண்டு தேன்நிலவு நுகரச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சீதை மட்டும் இந்தக் காலத்துப் பெண்கள் போலவே நடந்துகொண்டிருக்கிறாள். இக்காலப் பெண் கணவனை நோக்கி, கடைத்தெருவிற்கு இட்டுச் சென்றீர்களா?- கடற்கரைக்கு இட்டுச் சென்றீர்களா?. திரைப்படத்திற்கு இட்டுச் சென்றீர்களா?ஸ்கூட்டரில் நான் உங்கள் தோள்மேல் கையைப்போட்டுக் கொண்டு வரும்படி என்னைப் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றீர்களா? ஒரு நல்ல பேச்சு உண்டா? அடுத்தாத்து அம்புசத்தைப் பார்த்தேளா-அவள் ஆத்துக்காரர் கொஞ்சறதைக் கேட்டேளா-என்று சாடுகிறாள். தையல் சொல் கேளேல்" என ஒரு தையல் (ஒளவை) சொன்னது, சில ஆடவர்களைப் பொறுத்த மட்டில் சரியாயுள்ளது. அவர்களுள் நம் இராமரும் ஒருவர் போலும்!