பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 251 மேலும் அரசு துறந்து காடு ஏகும் உங்கட்கு. என்னைத் தவிர மற்றவையெல்லாம் இனியனவோ எனக் கூறிக் கண்ணிர் மல்க, உடம்பில் நிற்காத உயிர்போல வெந்து தத்தளித்தாள்-இதையும் அவளிடம் கூறுவாயாக: "ஆனபே ரரசிழந்து அடவிசேர் வாய் உனக்கு யானலா தனவெலாம் இனியவோ இனி எனா மீனுலா நெடுமலர்க் கண்கள் நீர்விழ விழுந்து ஊனிலா உயிரின் வெந்து அயர்வதும் உரைசெய்வாய்” (71) ஆட்சியை இழந்ததும் காடேகுவதும் உங்களுக்குத் துன்பமாகத் தெரியவில்லை. ஆனால் என்னை உடன் அழைத்துக்கொண்டு போவதுதான் உங்கட்குத் துன்பமாகத் தோன்றுகிறதோ? அப்படியே காடு செலினும், ஆங்கு என்னைத்தவிர மற்றவையெல்லாம் இன்பம் தருமோ எனக் கூறிக் கண்ணிர் சொரிந்ததோடு நிற்காமல், உடம்பைப் பிரிந்த உயிரே போலத் தானும் கீழே விழுந்து விட்டாள். இதையும் நினைவு செய்க. மற்றும், கோட்டை வெளிவாயிலைக் கடப்பதற் குள்ளாகவே, காடு எது?-காடு இன்னும் எவ்வளவு தொலை வில் உள்ளது என வினவினாள் - அதையும் நினைவு படுத்துக: "மல்லல் மா நகர்த் துறந்து ஏகுநாள் மதிதொடும் கல்லின் மா மதில் மணிக் கடைகடந் திடுதன்முன் எல்லை தீர் வரிய வெங்கானம் யாதோ எனச் சொல்லினாள் அ:தெலாம் உணரt சொல்லுவாய்' (72) மல்லல் = வளப்பம். மல்லல் மாநகர்த் துறந்து என்பதில் ஏக்கம் தெரிகிறது. மதி = திங்கள். திங்களைத்தொடும் அளவு உயர்ந்த கோட்டை மதிலின் வெளிவாயிலைக் கடப்பதற்கு முன்பே, கேட்கத் தொடங்கிவிட்டாள், சிறார்