பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு களை அழைத்துக்கொண்டு ஒர் ஊருக்குச் சென்றால், அந்த ஊர் எப்போது வரும் - இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது - தோ தெரிகிறதே இதுவா அந்த ஊர் என்றெல்லாம் வழி நெடுகிலும் அச்சிறார்கள் துளைத் தெடுத்து விடுவார்கள். அது போன்றதே சீதை வினவியதும். சிலப்பதிகாரத்திலும் இப்படியொரு நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. கண்ணகி கோவலனுடன் மதுரை நோக்கி வழி கடக்கத் தொடங்கிய சிறு நேரத்திலேயே, இடுப்பு ஒடிய கால் நோக - மூச்சு இரைக்க - பல்தெரிய மெல்லிய சொல்லால் மதுரை யாண்டையது என வினவினாளா: 'இறுங்கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து முதிராக் கிளவியின் முள்ளயிறு இலங்க மதுரை மூதூர் யாதென வினவ" (10:38-41) என்பது சிலம்புப்பாடல் பகுதி. இப்படிக்கேட்கிறோமே என மெல்லச்சிரித்தாளாம் கண்ணகி. கொஞ்சும் மெல்லியமொழி பேசிக்கேட்டாளாம். இது மிகவும் இயற்கையான நிகழ்ச்சி, சீதையும் இவ்வாறு கேட்டுளாள். இது, அடுத்த சுந்தர காண்டத்திலும் குறிப்பிடப்பட் டுள்ளது. கணையாழி தருதல் இராமன் பல அடையாளங்கள் கூறியபின், தன் கணையாழியை அனுமனிடம் தந்து, இதை நீ சீதைக்குக் காட்டி நம்பிக்கை ஊட்டுவாயாக என்று சொல்லி அனுப் பினான். அனுமன் செல்வதோடு, அங்கதன், சாம்பவன் முதலிய படைத்தலைவர்கள் இரண்டு வெள்ளம் படை களுடன் தெற்கு நோக்கிச் சென்றனர்: