பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 253 "இணையவாறு உரைசெயா இனிதின் ஏகுதி.எனா வனையும் மாமணி கன்மோதிரம் அளித்து, அறிஞகின் வினையெலாம் முடிகளினா விடைகொடுத்து உதவலும் புனையும் வார்கழலினான் அருளொடும் போயினான்'(73) 'அங்கதக் குரிசிலோடு அடுசினத்து உழவராம் வெங்கதத் தலைவரும் விரிகடல் படையொடும் பொங்குவில் தலைவரைத் தொழுதுமுன் போயினார் செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறுஞ் சென்னியார்” (74) ஒரு செயல் முடித்து வர ஒருவரை அனுப்பும்போது நல்லவிதமாகச் சென்று எல்லாம் நல்ல விதமாக முடித்து வருக எனச் சொல்லி அனுப்புதல் மரபு. இதைத்தான், ‘இனிதின் ஏகுக', 'வினையெலாம் முடிக’ என்னும் தொடர்கள் அறிவிக்கின்றன. வலனாக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால்” என்னும் கலித்தொகைப் பகுதிகாண்க. - தெற்கே ஏகும் படைக்கு அங்கதன் பொறுப்பாளி யாதலின் அங்கதக் குரிசிலோடு என்றார். படை மறவர்கள் அடு. சினத்து உழவர்' என உருவகிக்கப்பட்டுள்ளனர். இவர் களைத் திருவள்ளுவர் வில் ஏர் உழவர்' என்றார்; கம்பர் ஓரிடத்தில் வாள் ஏர் உழவர்' என்றுள்ளார். இந்த உருவகம் புறப்பொருள் வெண்பாமாலை நூலில் தெளி வாகக் கூறப்பட்டுள்ளது: கொளு: 'முழவுறழ் திணி தோளானை உழவனாக உரைமலிங் தன்று' வெண்பா: 'அஞ்சுவரு தானை அமர் என்னும் நீள்வயலுள் வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்.செஞ்சுடர் பைங்கண் பணைத்தாள் பகட்டுழவன் நல்கலான் எங்கட்கு அடையா இடர் (159) ஒரு வேலையாய்ச் செல்லுமுன் தலைவரை வணங்கிச் செல்லுதல் மரபாதலால் தலைவரைத் தொழுது என்றார். பொங்குவில் தலைவர். இராம இலக்குவர். செங்கதிர்ச் செல்வன் = சுக்கிரீவன்.