பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பிலம் புக்கு நீங்கு படலம் சீதையைத் தேடத் தென்திசை சென்ற வானரர் சிலர் ஒரு பிலத்துக்குள் தவறுதலாகப் புகுந்து பின்பு அனுமன் உதவியால் அதனின்றும் வெளிப்போந்த செய்தியைப் பற்றிய தாதலின், இப்படலம் இப்பெயர் பெற்றது. பிலம்புகு படலம் எனச் சில சுவடிகளிலும், பிலம் நீங்கு படலம் எனச் சில சுவடிகளிலும் பெயர் மாற்றங்கள் உள்ளன. வரலாற்றிற்கு இப்பகுதி வேண்டியது தானா என்பது ஐயத்திற்கு உரியது. • . தமிழ் உடைத் தென்திசை வாணர வீரர்கள் சீதையைத் தேடிப் பல பக்கங்களிலும் சென்றனர். அவர்களுள் தமிழ் வழங்கும் தென்திசைக்குச் சென்றவர்களைப் பற்றிப் பேசுவோம்: "குன்று இசைத்தன எனக் குவவுத்தோள் வலியினார் மின் திகைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய் வன்திசைப் படரும் ஆறு ஒழிய வண்தமிழுடைத் தென்திசைச் சென்றுளார் திறன்எடுத்து உரைசெய்வாம்” - - - - - - - - - (2) குன்று போன்ற தோளினர்= வானரர்கள். மின்னலும் மயங்கும் அழகிய இடையை உடைய கொடி = சீதை. தென்திசை தவிர்த்த மற்ற திசைகள் வன் திசைகள் எனப் பட்டன. வளமான தமிழ் வழங்குவதால் தென்திசை வன் திசைகளினின்றும் மாறுபட்ட மென் திசை எனக் கொள்ளல் தகும்.