பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 255 விந்திய மலை வானரர் விந்திய மலைப்பக்கம் சென்றனர். அம்மலை, சிந்துரம் என்னும் பொடியுடன் மணிகள் பொருந்தி அந்திவானம் போல் தோன்றுதலாலும், பாம்பு - திங்கள் - ஆறு ஆகியவை பொருந்தி இருத்தலாலும் சிவன் முடியை ஒத்திருந்ததாம். "சிந்து ராகத்தொடும் திரள்மணிச் சுடர் செறிந்து அந்திவானத்தின் கின்று அவிர்தலான் அரவினோடு இந்துயாறு எய்தலான் இறைவன்மா மெளலிகேர் விந்த நாகத்தின்மாடு எய்தினார் வெய்தினால்' (3) இப்பாடல், விந்திய மலைக்கும் சிவனுக்கும் பொதுவான செய்திகளைக் கூறி இருபொருள் அணி (சிலேடை) உடைய தாகத் திகழ்கிறது. செந்நிறச் சிந்துரப் பொடியும் செம்மணி களும் உடைமையால் மலை செந்நிறமுடையதாய்த் தோன்றுகிறது. சிவன் எனும் செம்மேனி அம்மான் என்னும் ஆன்றோர் மொழிக்கிணங்கச் சிவனும் செந்நிறத்தான். மலையிலும் பாம்பு உள்ளது - உச்சியில் திங்கள் காணப் படுகிறது - மலையிலிருந்து ஆறுதோன்றி ஒடும் சிவன் முடியிலும் பாம்பும் திங்களும் கங்கை ஆறும் உள்ளன. எனவே, சிவனும் விந்திய மலையும் ஒப்புமை உடையனவாம். முழுதும் காண்கிலார் விந்திய மலைப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தபின் நருமதை ஆற்றின் பால் எய்தினர். அந்த ஆற்றிலே சீதையை முழுவதும் காணமுடியவில்லை. சீதையின் கூந்தலையும் முகத்தையும் முறுவலையும் மட்டுமே கண்டனராம்: "பெறலரும் பெற்றியை நாடும் பெற்றியார் அறல்நறுங் கூந்தலும் அளக வண்டுசூழ் நிறைநறுந் தாமரை முகமும் கித்தில முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார்” (9)