பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற்கண்டேன் வல்லரக்கன் அருந்தி அகல்வான் சிந்தினவோ வாவி உரைத்தி யாமன்றே' (25) மருந்தின் அனையாள் = அமிழ்தம் ஒத்த சீதை. நிற்கண்டேன் = நின்னிடத்தில் பார்த்தேன். வல்லரக்கன் = இராவணன். சீதையின் உடல் உறுப்புகட்கு ஒப்புமையாகக் கூறப்படும் பொருள்களை யெல்லாம் சீதையின் உறுப்பு களாகவே கொண்டு இவை உன்னிடம் எவ்வாறு வந்தன என்று இராமன் பொய்கையை வினவியதாகக் கூறிக் கம்பர் கற்பனையில் (எவரெஸ்ட்) உச்சிக்குச் சென்று விட்டார். - "பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி' என்பது பாரதியார் பாடல். தேடப்போம் பொருளில் எல்லாம் அவளே” என்பது பாரதிதாசன் பாடல். ஆயிரம் கண்: அடுத்து இராமன் மயிலைப் பார்த்துக் கேட்கிறான்: மயிலே! சீதையின் சாயலுக்குத் தோற்றுப் பகைவர்போல் திரிந்தாய். இப்போது அவள் இல்லாமையால் உடல் குளிர்ந்து விட்டாயோ? உள்ளம் உவந்து ஆடுகின்றாயோ? நான் தேடுகின்ற என் உயிரான சீதையை நீ கண்டிருப்பாய், அவள் எப்படிப் போனாள்; எங்கே போனாள் என்பதை நீ சொல்ல மாட்டாயா? எனக்குத் தெரியாது என்று நீ மறைப்பாயாயின் நான் நம்ப மாட்டேன். ஆயிரம் கண்கள் உடையவர்க்குத் தெரியாத துண்டோ? ஒரு கண் பார்க்கா விடினும் மற்றொரு கண் பார்த்து ിത്രമേ - ஒளிக்க முடியாதே-என்கிறான். பாடல்: -