பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 257 முடியவில்லை. அப்பாலையின் வெப்பத்தைக் கண்டு ஞாயிறானும் அஞ்சினானாம். "மாருதி முதலிய வயிரத் தோள்வயப் போர்கெழு வீரரே குழுமிப் போகின்றார் நீர் எனும் பெயரும் அந்நெறியின் நீங்கலால் சூரியன் வெருவும்ஒர் சுரத்தைத் துன்னினார் (21) உலகில் உள்ள வெப்பப் பொருள்கள் எல்லாம் ஞாயிறால் தரப்பட்ட வெப்பத்தை உடையன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நில உலகமே ஞாயிறிலிருந்து இற்றுத் தெறித்து விழுந்த ஒருபொறி என்கின்றனர். இத்தகைய ஞாயிறே அஞ்சுகிறான். எனில் அப்பாலையின் வெப்பம் எவ்வளவு கொடுமையானது என்பதை அறியலாம். இது ஒர் உயர்வு நவிற்சியாகும். மாருதி = அனுமன். அனுமன் முதலிய வலிமை மிக்க வராலேயே தாங்க முடியாத வெப்பமாம். உலகியலில், தேநீர் தராததைப் பற்றி, தேநீர் என எழுதிக் காட்டக்கூட இல்லையா - தேநீர் என வாயால் சொல்லிக் காட்டக்கூட இல்லையா - என வேடிக்கையாகக் கேட்பதுண்டு. அதுபோல், இங்கே நீர் என்ற பெயருக்கே இடம் இல்லை என்று கம்பர் உலகியலை ஒட்டிக் கூறியிருப்பது சுவை பயக்கிறது. என்பு இல் உயிர் நெருப்பு எரியும் நரகத்தில் சிக்கிய எலும்பு இல்லாத உயிர்கள்போல வானரர்கள் வெந்து புழுங்கினராம். . தென்புலம் தங்குளி நரகில் சிந்திய என்புஇல் பல்உயிர் எனவெம்மை எய்தினர்' (23) தென்புலம் = தெற்கு உலகம். எமனது இருப்பிடம் தென்திசையில் இருப்பதாகக் கூறுவர். தென்திசைக்கு உரிய