பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தெய்வத் தலைவன் எமனாம். இவன் மேலாட்சியில் நரகம் இயங்குகிறதாம். நரகில் தீ எரிந்து கொண்டிருக்குமாம். நரகம் அடைபவர் அத்தீயில் வெந்து நொந்து போவார் களாம். எலும்பு இல்லாத புழு பூச்சிகள் வெற்று வெயிலிலேயே சுருண்டு போகும். என்பு இலதனை வெயில் போலக் காயுமே என்பது வள்ளுவம். இத்தகைய எலும்பு இல்லாத உயிர்கள் எரி நரகில் அகப்பட்டால் என்ன ஆகும்? இந்த எரி நரகில் அகப்பட்ட எலும்பில்லா உயிர்கள் இங்கே வானரர்க்கு உவமையாக்கப்பட்டுள்ளன. சிந்திய. உயிர் என்னும் தொடர் சிந்திக்கத்தக்கது. . அகல் எழு பொரி - வெப்பத்தால் நீர் வேட்கை மிக, தண்ணீர் வேண்டி நாக்கை வெளியிலே நீட்டிக் கொண்டிருந்தனர். காலில் குட்டினால் கொப்புளங்கள் தோன்றின. பாலைவனத்து வெப்பத்தைவிடத் தம் உடம்பு மிக்க வெப்பம் உடையதான தால், நெருப்புச் சட்டியில் இட்ட பொரிபோல் பொரிந்து துள்ளினராம். - -- - - 'நீட்டிய காவினர் கிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் காட்டினும் காய்ந்து தம்காயம் தீதலால் சூட்டு ിഴക്കേ எழுபொரியின் துள்ளினார்" (24) வறுக்கும் சூடான சட்டியில் நெல்லைப் போட்டால் அது பொரியாக மாறும். அதுபோல் வானரர்களின் உடம்பு மாறியதாகக் கம்பர் கூறும் உவமை சுவையானது. காயம் = உடம்பு, அகல் = சட்டி. இருள் குகை அப்போது வழியில் ஒருகுகை தெரிந்தது. உலகத்து இருள் முழுவதும் ஞாயிற்றுக்கு அஞ்சி அங்கு வந்து ஒளிந்து