பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 259 கொண்டிருப்பதாக எண்ணும்படியான இருள் மிக்க குகை அது. "அக்கணத்து அப்பிலத்து அசுணி எய்தினார் திக்கினோடு உலகுறச் செறிந்த தேங்கிருள் எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுறப் - புக்கதே அனையதோர் புரைபுக்கு எய்தினார்' (27) பிலம் = குகை. அசுணி = உள் பகுதி. இருளின் மிகுதி இப் பாடலில் கற்பனை செய்யப்பட்டுள்ளது. பொழிலின் செறிவு இருள் போன்று இருப்பதாகப் புகழேந்தியும் நளவெண்பாவில் கூறியுள்ளார். ஞாயிற்றொளி புகமுடியாத பொழில் எனப் புலவர் சிலர் கூறியுள்ளை முன்னமே கண்டுள்ளோம். - கையும் காலும் குகையின் இருள் செறிவில் அகப்பட்டுக் கொண்ட வானரர்கள் அப்படி..இப்படிச் செல்வதற்கு வழி தெரியாத வராய் வருந்தி, தக்க ஏற்பாடு செய்து தங்களைக் காப் பாற்றும்படி அனுமனை வேண்டினர். அப்போது அனுமன், உள்ளம் கவலற்க - எல்லோரையும் காப்பாற்றுவேன் - என் வாலை எல்லோரும் நன்கு பற்றிக் கொள்ளுங்கள் விடா தீர்கள் - என் பின்னாலேயே வாருங்கள் என்று கூறி, கை களால்-வழி தடவிக் கால்களால் நடக்கலானான்: - "உய்வுறுத்துவென் மனம் உலையீர், ஊழின் வால் மெய்யுறப் பற்றுதிர் விடுகிலீர் என * - - - - ஐயன் அக்கணத்தினில் அகலும் நீள்நெறி கையினால் தடவி வெங்காலின் ஏகினான் (30) உய்வுறுத்துவென்= காப்பாற்றுவேன். அனுமனின் வால் எவ்வளவுக்கு வேண்டுமானாலும் நீளும். அதனால் எல்லா மறவரையும் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னான் - மெய்யுறப் பற்றுதல் என்றால் அதுதான்.