பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இப்போது சில இடங்களைக் கடக்க நீளமான கயிற்றைக் கட்டி விட்டு அதைப் பிடித்துக் கொண்டே செல்வது போல் செல்ல அனுமன் வால் பயன்படுகிறது. தள்ளாத அகவை உடைய முதிய தவசியர் குரங்குகளின் வாலைப் பிடித்துக் கொண்டு செல்வதாகக் கம்பர் வேறோரிடத்தில் கற்பனை யாகக் கூறிப் படிப்பவர்களை மகிழ்வுறுத்தியுள்ளார். காலால் வழி தடவிச் செல்வதாகக் கூறுதல் மரபு. சில இடங்களில் கையாலும் தடவிப் பார்ப்பது உண்டு. காலிலும் கையிலும் கண்கள் இல்லையாயினும், தொடு உணர்வே இங்கே கண்ணாக வேலை செய்கிறது. இந்த அமைப்பு மக்கள் பிறப்பினர்க்கு உரியது. ஆனால், வானரங்களுக்கு முன்கால்கள் இரண்டும் கைகளாகும் - பின்கால்கள் இரண்டுமே மக்களுடையன போன்ற கால்களாகும். பின் கால்களை ஊன்றிக் கொண்டு முன் கால்களாகிய கைகளால் குரங்குகள் என்னென்னவோ செய்யும். அந்த முறையில், அனுமன் கையால் தடவிக் காலால் நடந்தான் என்று கூறப் பட்டிருக்கலாம். -- நகர் வலம் இவ்வாறாக வானரர்கள் குறிப்பிட்ட தொலைவு கடந்து சென்றபின் அங்கு ஓரிடத்தில் ஒளி மிக்க நகரம் ஒன்றைக் கண்டனர். அந்நகரில் சோழ மன்னனிடம் பரிசு பெற்ற கவிஞர்களின் வீடுகளில் உள்ளாங்கு, பொன், உயரிய உடை, சாந்து, மாலை, அணிகலன்கள் ஆகியவற்றின் குவியல்கள் அளவிறந்து மிக்கிருந்தனவாம்: "புவிபுகழ் சென்னி பேரமலன் தோள்புகழ் கவிகள் தம் மனையெனக் கனக ராசியும் சவியுடைத் தூசும்மென் சாந்தும் மாலையும் அவிர் இழைக் குப்பையும் அளவிலாதது (35)