பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 261 சென்னி=சோழன். அமலன் - தீமை அற்றவன். அமலன் என்பதால், உத்தமச் சோழனாயிருக்கலாம் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். எதையும் திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. வரலாற்றுக் குறிப்புகளைத் தெளிவாகத் தெரிவிக்காதது நம்மவரின் குறைபாடேயாகும். தோள் புகழ் கவிகள்=சோழனது மற ஆற்றலைப் புகழ்ந்து பாடிய புலவர்கள். சோழன் தன்னைப் பாடியோர்க்கு இவ்வளவு பொருள்களும் ஈந்துள்ளான் என்பது இப்பாடலால் தெளிவுறும். மற்றும், கம்பர் தம்மை ஆதரித்த சோழன்பால் மிக்க நன்றி செலுத்தியுள்ளார் என்பதும் இப்பாடலால் தெளிவுறும். தம்மை ஆதரித்த சடையனைத் தம் நூலின் இடையிடையே புகழ்ந்துள்ளது போலவே, ஈண்டு சோழனைப் புகழ்ந்துள்ளார். இதனால் நமக்கு ஓரளவாவது வரலாற்றுக் குறிப்பும் கிடைக்கிறது. சுயம்பிரபை அந்நகரத்தில் உயிர் உள்ள பொருள் எதுவும் இல்லை. எல்லாம் எழுதிய ஒவியம் போல் உள்ளன. அந்நகரின் தோற்றத்தைக் கண்ட வானரர்கள் பல எண்ணி மயங்கு வதும் வியப்பதுமா யிருந்தனர். அனுமன் அவர்கட்கு ஆறுதல் கூறித் தேற்றினான். மேலும் சென்றதும் அந்நகரின் நடுவே சுயம் பிரபை என்னும் அழகிய பெண் ஒருத்தி, தவம் எல்லாம் ஒருங்கு திரண்டு ஒர் உருவெடுத்து வந்தாற்போல், கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருக்க அமர்ந்திருந்ததைக் கண்டனர்: 'கற்றவம் அனைத்தும் உருநண்ணி' (45) கருங் கயல்களின் பிறழ்கண் மூக்கின் நுதிகாண'(46) என்பன பாடல் பகுதிகள். கண்கள் மூக்கின் நுனியைப் பார்ப்பது யோகம் தொடர்பான ஒரு நிகழ்வாகும். மலச்