பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 263 மூச்சை நடுவில் நிறுத்துதல் என்றால் என்ன? நாம் மூக்கின் இரண்டு தொளைகளின் வழியாக மூச்சை வெளியே விடுகிறோம் - உள்ளே இழுக்கிறோம். மூக்கின் வலப் பக்கத்திற்குப் பிங்கலை என்பதும், இடப்பக்கத்திற்கு 'இடகலை என்பதும் பெயராகும். மூக்கின் நடுப்பகுதிக்குச் சுழு (ழி) முனை என்பது பெயர். பயிற்சியில் இருப்பவர்கள், பிங்கலையாலோ - இடகலையாலோ மூச்சை வெளிவிடா மலும் உள் இழுக்காமலும் முக்கின் நடுப்பகுதியாகிய சுழி முனையில் ஒரே நிலையில் அடக்கி நிலைத்திருக்கச் செய்தல் யோகத்தின் ஒரு படியாகும். இதைத் தான் உயிர்ப்பு இடை பரிப்பு என்று ஆசிரியர் கூறியுள்ளார். முத் தாரம் சுயம் பிரபையைக் கண்ட வானரர்கள் இவள்தான் சீதையோ என ஐயுற்று, நன்கு கவனித்துத் தெரிவிக்கும்ப அனுமனிடம் கூறினார். சங்கு மணி மாலை முத்து மாலைக்குச் சமமாகும் எனில், இவள் சீதையாயிருப்பாள் - என்று அனுமன் கூறினானாம்: "எக்குறியொடு எக்குணம் எடுத்து இவண் உரைக்கேன் இக்குறி உடைக்கொடி இராமன் மனையாளோ அக்குவடம் முத்தமணி ஆரமதன் நேர்கின்று ஒக்குமெனில் ஒக்குமென மாருதி உரைத்தான்’ (51) அக்குவடம் = சங்கு மணி மாலை. முத்த மணி ஆரம் = முத்து மாலை. எந்த அடையாளம் - எந்தக் குணம் கொண்டு இவளை இராமன் மனைவியாகிய சீதை என்று துணிவது என்று கூறி, அப்படி ஒன்றும் இல்லை - சங்கு மணி முத்து மாலைக்கு ஒப்பாகும் எனில் இவள் சீதையா யிருக்க முடியும் என்று அனுமன் கூறியதிலிருந்து, இவள் சீதை இல்லை என்று அனுமன் கூறியதாகக்கொள்ளல் வேண்டும். வினாவிற்கு வினாவிடை விடுத்தல் போன்ற தோர் அறிவிப்பாகும் இது.