பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு விருந்தோம்பல் வானரரைக் கண்ட சுயம்பிரபை, நீங்கள் யார் - ஏன் இங்கு வந்தீர்கள்? - என வினவினாள். இராமனுக்காகச் சீதையைத் தேடவந்துள்ளோம் என வானரர்கள், கூற, இவர்களின் வரவை எதிர்பார்த்திருந்த சுயம்பிரபை அனைவருக்கும் விருப்புடன் விருந்தளித்தாள். முதலில், என் தவம் பலித்தது - வீடுபேறு கிடைக்கும் என்று கூறி அவர்களின் கால்களை நீர் ஊற்றித் தூய்மை செய்து, அமிழ்தம் போன்ற சுவையுடைய உணவை அளித்து அவர் களின் உள்ளங் குளிர இன்மொழி பேசினாள். 'கேட்டவளும் என்னுடைய கேடில்தவம் இன்னே காட்டியது வீடு என விரும்பி நனிகால் நீர் ஆட்டிஅமிழ் தன்னசுவை இன்னடிசில் அன்போடு ஊட்டிமனன் உள்குளிர இன்னுரை உரைத்தாள்” (56) விருந்தோம்பும் முறை ஒரு சிறிது இப்பாடலில் கூறப் பட்டுள்ளது. விருந்தினரின் கால்களைத் தூய்மை செய்தல் - சுவையான உணவு அளித்தல் - இன்னுரை பகர்தல் - ஆகியவை முறையாகும். தலையில் அடித்துக் கையில் கொடுத்தல் என்பதுபோல் சிலர் கடமைக்கு விருந்தளிப்பார் கள். வெறுப்போடு செய்யும் விருந்தைவிட, அன்போடு பேசும் இன்மொழி மிக்க விலைமதிப்பு உடைய தாகும். சிலர் எட்டி நின்று கொண்டு, விருந்தினர் உண்டு முடித்து எழுந்திருக்கும் போது இன்னும் கொஞ்சம் வைத்துக் கொள்கிறீர்களா என்று வஞ்சகமாய் - ஒப்புக்குக் கேட்பர். வேண்டாம் போதும் எனக் கூறினும் வற்புறுத்தி இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்று கூறி உணவளித்தலைத்தான் கம்பர் 'ஊட்டி என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். விருப்பம் இன்றி இடும் உணவு, செத்த பிணத்திற்குப் படைக்கும் உணவு போன்றது - என்னும் கருத்துடைய.