பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 265 'பிரியமு லேனி கூடு பிண்டபு கூடயா' என்னும் வேமன்னா அருளிய வேமன்ன பத்தியம் என்னும் தெலுங்கு நூற்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. பிரியமு லேனி - பிரியம் (விருப்பம்) இல்லாத. கூடு = உணவு, பிண்டபு செத்தார்க்குப் படைக்கும் பிண்டம் எனப் படுகிற, கூடயா = உணவு அய்யா - என்பது பொருள். உண்பதற்கு, முன் காலைத் தூய்மை செய்தல் என்னும் வழக்காறு பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. கண்ணகி கோவலனுக்கு உணவு அளிக்குமுன், அவன் கால்களைத் தூய்மை செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது; "கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி’ (16:38, 39) என்பது பாடல் பகுதி. அடுத்துப் பெரிய புராணத்திற்குச் சென்று ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் காணலாம். அப்பூதி நாயனார் திருநாவுக்கரசரைத் தம் மனைக்கு அழைத்து வந்து விருந்து அளிக்கு முன், நாவுக்கரசரின் கால்களைத் தூய்மை செய்து அந்தத் தண்ணீரை எல்லாரும் தலைமேல் தெளித்துக்கொண்டனராம். 'முனைவரை உள்எழுந் தருளுவித்து அவர்தாள் முன்விளக்கும் புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்து உள்ளம் பூரித்தார்’ (1807) என்பது பாடல் பகுதி. நாவுக்கரசர் வேளாளர் - அப்பூதி அந்தணர் என்பது குறிப்பிடத்தக்கது. சுயம் பிரவை வரலாறு அனுமன் சுயம் பிரபையின் வரலாற்றை வினவ, அவள் கூறலுற்றாள். அது: மயன் இந்நகரத்தைப் படைத்துத் தெய்வ உலக அரம்பை ஒருத்தியை இங்கே கொண்டு வந்து