பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 23 "ஓடாகின்ற களிமயிலே சாயற்கு ஒதுங்கி உள்ளழிந்து கூடாதாரின் கிற்கின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ தேடாகின்ற என்உயிரைத் தெரியக் கண்டாய் சிங்தை உவந்து ஆடாகின்றாய் ஆயிரங்கண் உடையார்க்கு ஒளிக்குமாறு உண்டோ?' (26) மயிலின் தோகையில் பல கண்கள் இருப்பதால் ஆயிரம் கண் என மிகைப்படுத்திக் கூறினார். இருபொருள் அமைந்த ஆயிரம் கண் என்ற தொடரைக் கொண்டு இப்பாடலில் கம்பர் விளையாடியிருக்கிறார். முதலில் நிகழ்ச்சியைக் கூறிவிட்டு இறுதியில் ஆயிரம்கண் உடையவர் அறியாததில்லை என்ற வேறொரு பொருள் பெறச் செய்திருக்கும் இந்த அமைப்பு வேற்றுப் பொருள் வைப்பு அணி எனப்படும். தமிழ்ப் பாட்டு தாமரை மலரை நோக்கி வருந்தும் இராமன் அதனைப் பின்வருமாறு விளிக்கிறான்; அதாவது: வண்டு தாமரை மலரில் சென்று தாதுவைத் தன்பால் பூசிக்கொண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கின்றதாம். அத்தகைய தாமரையே என விளிக்கிறான். "பொன்பால் பொருவும்.விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது தன்பால் தழுவும் குழல் வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே” (28) என்பது பாடல் பகுதி. புலவர்கள் பொழிலில் ஒரு நடன அரங்கம் நடப்பதாக இலக்கியங்களில் புனைந்துரைக்கும் <。『H உண்டு. வண்டு குழல் இசைப்பதாகவோ அல்லது