பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆறு செல் படலம் அனுமன் முதலிய வர்னர மறவர்கள் வழி கடந்து செல்லுதலைக் கூறும் படலம் இது. ஆறு = வழி. ஒரு பொய்கைக் கரையை அடைந்த வானரர்கள். அப் பகுதியிலுள்ள தேன், காய், கனி முதலியவற்றை நிரம்ப உண்டு வழி நடந்த களைப்பால் படுத்து உறங்கிவிட்டனர். அப்பகுதியை ஆண்டுகொண் டிருந்த துமிரன் என்னும் அரக்கன் இவர்களைக் கண்டு சினமுற்று, அங்கதன் மார்பில் ஓங்கி ஒர் உதை விட்டான். விழித்துக் கொண்ட அங்கதன் பதிலுக்கு அரக்கனைத் தாக்கி உயிரைப் போக்கி விட்டான். அரக்கன் அலறிக்கொண்டே தொப்பென்று விழுந்தான். அவ்வொலி கேட்ட வானரர்கள் விழித்துக்கொண்டனர். துமிரன் தோற்றம் இந்த அரக்கன் துமிரனைப் பின்வருமாறு ஆசிரியர் புனைந்துரைத்துள்ளார்: மலை போன்றவனாம் - கடலை ஒத்தவனாம்; கொலை செய்வதில் கூற்றை (எமனை) நிகர்த்தவனாம்; கொடுமைக்கு நிலையான உறைவிடமா யிருப்பவனாம்; நற்பண்பு இல்லாதவனாம்; பிறைபோன்ற கோரைப் பற்களை உடையவனாம்; கனல் கக்கும் கண்ணினனாம்: "மலையே போல்வான் மாகடல் ஒப்பான் மறம் முற்றக் கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான்,கொடுமைக்கு ஓர்