பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான்' (2) ஒருவனது கொடுமையை இதற்கு மேலும் எவ்வாறு புனைவது? உயரத்திலும் திண்மையிலும் மலையை ஒத்த தோற்றத்தான். உருவத்தின் பரப்பில் மாகடலைப் (சமுத்திரத்தைப்) போன்றவன். உருவம் அங்ஙனமெனில், அவனது செயல் என்பது கொலைதான் - இதில் - எப்போதும் உயிர் குடிக்கும் தொழிலனாகிய எமனை நிகர்த்தவன். கொடுமை இவனிடமிருந்து தான் வெளியாகும் - அதற்கு உறைவிடமானவன். வளைந்த கூரிய பிறை நிலாபோன்ற கோரப்பற்களை உடையவனாம் - பற்களைக் கண்டாலே அச்சம் ஏற்படும். 'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்” (575) என்றார். வள்ளுவர். இவனுக்குக் கண்ணோட்டம் என்பது தகிக்கும் கனல்தான். இத்தகையோனை அங்கதன் எளிதில் கொன்று விட்டான். பெண்ணை நாடுவார் சீதையாகிய பெண்ணை நாடிச் சென்றவர்கள் பெண்ணை அடைந்தனராம்; அதாவது, பெண்ணை ஆற்றை அடைந்தனராம். பெண்ணையாறு ஒரு பெண்ணாகவே உருவகிக்கப்பட்டுள்ளது. மணல் மேடாகிய முலைகளையும், ஆம்பலாகிய இதழ் வாயினையும், முத்துகளாகிய பற்களையும் உடையதாம்: 'புண்ணை வெம்முலைப் புளினம், ஏய்தடத்து உண்ண ஆம்பலின் அமிதம் ஊறுவாய், வண்ண வெண்ணகைத் தரளம் வாள்முகப பெண்ணை கண்ணினார் பெண்னை நாடுவார்’ (12)