பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 269 புண்ணை = புள்நை-சக்கரவாகம் என்னும் பறவையை முலைக்கு ஒப்புமையாகக் கூறுவது மரபு. அந்தப் புள் முலைக்கு இருக்கும் அழகு நமக்கு இல்லையே என நைகிறதாம் (வருந்துகிறதாம்). புளினம் = மணல்மேடு. ஆற்றின் நடுவே மணல்மேடு இருக்கும். ஆற்றங்கரை ஆம்பல் மலர்தான் இங்கு உதடோடு கூடிய வாய். ஆற்றில் அடித்துக்கொண்டு வரும் தரளம் (முத்து) வெண்மையான பல்லாகும். வாள்முகம் = ஒளி பொருந்திய முகம். மற்ற உறுப்புகளைக் கூறியுள்ள சூழ்நிலையைக்கொண்டு, தாமரை யாகிய முகத்தையும் உடையதாகச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். பெண்ணை நாடுவார் பெண்ணை நண்ணினார்’ எனப் பெண்ணை என்பது இருபொருள் தந்து சுவை பயக் கிறது. இந்தப் பெண்ணை வடபெண்ணையாகும். கோதாவரி வானரர் பெண்ணையைக் கடந்தபின், விதர்ப்ப நாடு, தண்டகவனம், முண்டகத்துறை, பாண்டு மலை முதலிய வற்றைக் கடந்து கோதாவரி ஆற்றை அடைந்தனர். இந்த ஆறு, சனக மன்னன் வேள்வி தொடங்க மறை மந்திரங் களோடு நிலத்தை உழுதபோது நிலமகள் ஈன்ற சீதைக்காகசீதையின் இப்போதுள்ள துயர நிலைமைக்காக அழுகின்ற கண்ணிர் மழை என்று சொல்லும்படியாக ஓடியது. "எழுகின்ற திரையிற் றாகி இழிகின்ற மணிநீர் யாறு - தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதிச் சொல்லால் உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒருமகட்கு இரங்கி ஞாலம் அழுகின்ற கலுழி மாரியாம் எனப் பொலிந்த தன்றே' (28)