பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இயற்கையாக ஒடுகின்ற ஆற்றுநீரை சீதைக்காக அழும் கண்ணிர் எனக் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுதலால் இந்த அமைப்பு தற்குறிப்பு ஏற்ற அணி எனப்படும். சீதா என்னும் வட சொல்லுக்கு உழுத சால்' என்று பொருளாம். உழுத மண் சால் பிளவில் கிடைத்ததால் சீதா எனும் பெயர் வைக்கப் பெற்றது. மேலும் - கோதாவரி நீண்டு கிடப்பது, நிலத்தை அளக்கும் துறையைச் சேர்ந்த அளவையாளர்கள் (Surveyor) அளப்பதற்காகப் போட்டிருக்கும் அளவை நூல்போல் காணப் படுகிறதாம். மற்றும், மணியும் பொன்னும் உடைத்தா யிருக்கும் அந்த ஆறு, இராவணனின் மார்பிலிருந்து சடாயு பிய்த்தெறிந்த வடகப் போர்வை போலவும் உள்ளதாம். "ஆசில் பேருலகில் காண்போர் அளவைநூல் எனலு மாகிக் காசொடு கனகம் தூவிக் கவினுறக் கிடந்த கான்யாறு. ஏசுபோர் அரக்கன் மார்பின் இடைபறித்து, எருவை வேந்தன் வீசிய வடக மீக்கோள் ஈதென விளங்கிற் றன்றே' (29) இந்தப் பாடலில் கோதாவரி ஆற்றுக்கு இரண்டு உவமைகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று: அளவை நூல்போல் மண்ணின்மேலே நீண்டு கிடந்து ஒடுகிற்து. இதனால், அந்தக் காலத்திலேயே நூல் கயிறு கொண்டு நிலம் அளக்கும் வழக்கம் இருந்தது புலனாகும். ாமற்றோர் 82_ ❍ 6óᏞ0Ꮖ • ஆற்று நீரில் மாணிக்கம், பொன் முதலியன அடித்துக்கொண்டு வரும் தோற்றம், இராவணன் மார்பில் உள்ள பொன்னும் மணியும் பதித்த போர்வை போன்றிருந்ததாகும். வடகம்=உடைவகை, மீக்கோள் =