பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 271 மேலே போர்த்திக் கொள்ளும் - அதாவது மார்பின்மேல் அணிந்துகொள்ளும் போர்வை போன்ற ஆடம்பர உடை. அரக்கன் = இராவணன். எருவை வேந்தன் = கழுகு அரச னாகிய சடாயு. இராவணன் அவ்வழியாக வானூர்தியில் எடுத்துச் சென்றபோது சடாயு இராவணனோடு போரிட்டான். அப்போது இராவணன் மார்பிலிருந்து சடாயு பிய்த்தெறிந்திருக்கலாம். அவ்வாறு எறிந்த போர்வையோ என எண்ணும்படிக் கோதாவரியின் தோற்றம் இருந்ததாம். கோதாவரியைத் தொடர்ந்து சுவணகத் துறை, குலிங்க நாடு, கொங்கணம், அருந்ததி மலை, மரகத மலை முதலிய வற்றைக் கடந்து திருவேங்கட மலையை வந்து அடைந்தனர். திருவேங்கடம் . . வலக்கையில் ஆழிப்படை ஏந்திய முகில் நிறத்தனாகிய திருமால் எழுந்தருளியுள்ள அம்மலையில் உள்ள விலங்கு களும் வீடுபேறு எய்தும் எனில், மெய்யறிவாளர்க்கு வீடு பேறு தவறுமோ? . - 'வலங்கொள் நேமி மழைகிற வானவன் அலங்கு தாளினை தாங்கிய அம்மலை விலங்கும் வீடு உறுகின்றன, மெய்ந்நெறிப் புலங்கொள் வார்கட்கு அனையது பொய்க்குமோ” (36) மழை நிற வானவன் = திருமால். அணையது. = விலங்கு களும் பெறும் அந்த வீடுபேறு. பொய்க்குமோ=பொய்க்காது. திருவேங்கடத்தின் சிறப்பு இதனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு திருவேங்கடப்பகுதியில் தேடிப் பார்த்தபின் வானரர்கள் தொண்டை நாட்டின் உள்ளே புகுந்தனர். தொண்டை