பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு நாடு, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைப் பகுதிகளும் அமைந்த நாடாகும். "குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர் முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய்புனல் சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண்திரை மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கெலாம்' (39) குன்று = குறிஞ்சி. சூழ்ந்த கடம் = பாலை. கோவலர் படப்பை = முல்லை. புனல் சூழ்ந்த கிடக்கை = மருதம். திரை சூழ்ந்த பரப்பு = நெய்தல். ஐந்திணைகளும் தமிழ் நூல்களில் சொல்லியுள் ளாங்குத் தொண்டை நாட்டில் உள்ளன. திருவேங்கடம் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாக அக்காலத்தில் இருந்தது. இன்று அதன் பெயர் திருமலை’ என்பது. இதைத் தொண்டை நாட்டினின்றும் பிரித்துத் தனியாகக் கூறக் கூடிய அளவில் அரசியல் - மொழியியல் சூழ்நிலைகள் பின்னர் அமைந்துவிட்டன. மருவினார்க்கு மயக்க மில்லை தெருவில் பலவகை இயங்களின் ஒலியை முகிலின் இடி ஒலி என மயில்கள் எண்ணி இன்புறுவதில்லை. ஏர்க்களம் பாடும் உழவர்களின் மத்தள ஒலியைக் கேட்டு அன்னங்கள் அஞ்சுவதில்லை. பலமுறை பழகியவர்க்கு மயக்கம் இராதன்றோ? ~ . தெருவின் ஆர்ப்புறும் பல்லியம் தேர்மயில் கருவி மாமழை என்று களிப்புறா - பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா மருவி னார்க்கு மயக்கம் உண்டாகுமோ? (42) கருவி மாமழை = தொகுதியான - கூட்டமான கரிய முகில். வானத்தில் முகில் தோன்றினால் மயில்கள் மகிழ்ந்து நடனம் ஆடுவது இயல்பு. திருவையாற்றில், மயில்கள் நடனம் ஆட, முகில் இடி இடிக்க மழை வரும் என அஞ்சி