பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 273 குரங்குகள் மரத்தில் ஏறி வானத்தைப் பார்த்தனவாம். இதனை, ஞானசம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்திலுள்ள 'வலம்வந்த மடவார்கள் நடமாட முழவு.அதிர மழை என்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே' (3 : 1) என்னும் பாடல் பகுதியால் அறியலாம் பெண்கள் கோயிலை வலம் வருவது மயில்கள் நடனமாடுவது போல் இருக்கிறதாம்-கோயில் முழவு அடிக்கப்படுவது இடிபோல் தெரிகிறதாம். அதனால் மழைவரும் என மந்திகள் அஞ்சுகின் றனவாம். இதிலிருந்து, முகில் இடித்தால் மயில்கள் மகிழ்ந்து நடனமாடுவதுண்டு என உய்த்துணரலாம். ஆனால், தொண்டை நாட்டுத் தெருவில் கேட்கும் இயங்களின் முழக்கத்தை இடியாக மயங்கி மயில்கள் மகிழ்வதில்லையாம். அடுத்து, - உழவர்கள் தண்ணுமை முழக்கினால் அன்னங்கள் அஞ்சி ஓடிவிடுமாம். ஆனால் இங்கே ஒடுவ தில்லையாம். இவ்விரண்டிற்கும் காரணம், மயில்களும் அன்னங்களும் பல முறை கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டதே யாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்னும் பழமொழியும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. முதலில் ஒரு செய்தியைச் சொல்லி, அதிலிருந்து கிடைக்கும் வேறொரு கருத்தை அறியவைக்கும் அமைப்பு வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும். மயில்கள்-அன்னங்களின் செயல்கள் முன்னால் சொல்லப்பட்டன. அவற்றைக் கொண்டு பின்ன்ால் மருவினார்க்கு மயக்கம் இல்லை என்னும் கருத்து பெறப்பட்டதாகப் பாடல் அமைந்துள்ளது. பாவம்-ஆமைமுதுகு நண்டு பிடிக்கும் உழத்தியர்கள், வளையில் கையை விட்டபோது, சங்குகள் ஈன்ற முத்துகள் கையில் அகப்பட,